Thursday, June 11, 2020
On Thursday, June 11, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 1875 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருச்சியில் நேற்று வரை 132 பேர் கொரோனாவிற்கு பாதித்து இருந்தனர். இதில் 105 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். ஒரே ஒரு மூதாட்டி மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதை அடுத்து 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சமயபுரம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக 2 பேர் தனிமை படுத்துவதற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர், தற்பொழுது அவர்கள் இருந்த இடம் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் எந்த வித பாதுகாப்பும் ஏற்படுத்தாமல் மேலும் அப்பகுதியில் கொரோனா பரவும் அச்சம் நிலவி வருகிறது,
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் விசுவநாதன் அவர்களிடம் செய்தியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்ட பொழுது சரியாக பதில் அளிக்கவில்லை பிறகு நாங்க பாக்காத பிரஸ் அஹ என கூறி மழுப்பி சென்றுவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment