Thursday, June 11, 2020
On Thursday, June 11, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம்
பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந்துள்ளதை கான்கரிட் கலவை கொண்டு செப்பனிடப்பட்டு
வரும் பணியை பொதுபணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி
இன்று(11.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்கால் சுமார்
19500 ஏக்கர் பாசனம் அளிக்கக்கூடியது இந்த வாயக்காலின் தலைப்பு மதகு 1934ஆம் ஆண்டு
கட்டப்பட்டது.
இந்த தலைப்பு மதகில் அடைப்பு பலகைகள் உள்ள பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார
பகுதிகள் செல்லும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க
கைப்புறச்சுவர் திடிரென சாய்ந்து விட்டது. இச்சுவர் செங்கல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை
மேலும் 80 ஆண்டுகளைக் கடந்து உள்ளதாலும் பழுதடைந்துவிட்டது.
இச்சுவர் விழுந்ததினால் பெருவளை வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில்
எவ்வித இடையறும் இல்லை. இருப்பினும் போக்குவரத்திற்கு சிரமம்இல்லாமல் இரவு பகலாக
இப்பழுதடைந்த பகுதியினை கான்கிரிட் கலவை கொண்டு செப்பணிடப்பட்டு வருகின்றது. இன்னும் 15
நாட்களுக்குள் பணிகளை முழுமையாக முடிக்கப்படும் என பொதுபணித்துறை திருச்சி மண்டல
தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது பொதுபணித்துறை நடுகாவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக்கோட்ட
செயற்பொறியாளர் பாஸ்கர் உதவி பொறியாளர்கள் ஜெயராமன் புகழேந்திரன் மற்றும்
பலர் உடனிருந்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...

0 comments:
Post a Comment