Monday, March 15, 2021
குழுமணி பகுதியில் சாருபாலா ஓட்டு வேட்டை
திருச்சி ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அந்தநல்லூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமணி எம்ஜிஆர் சிலை அருகே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...


0 comments:
Post a Comment