Tuesday, September 07, 2021
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கிடவும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கி வரும் உபரி பணியாளர்களை அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தும் ஏபிசி சுழற்சி முறை பணியிடமாறுதல வரவேண்டும் கொரோனாவால் உயிரிழந்த பணியாளருக்கு நிவாரண நிதி மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிடவும் சிறு சிறு தவறுக்காக ஆண்டுக்கணக்கில் மதுபான கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை உடனடியாக கடை பணியில் அமர்த்திடவும் பல்வேறு காரணங்களினால் பணியின்றி ஆண்டு கணக்கில் உள்ள பணியாளர்கள் பணி வழங்கிடவும் பல மாவட்டங்களில் மேலாண்மை இயக்குநரின் உத்தரவை மதிக்காமல் முறைகேடான நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்ட மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 5 மாவட்ட மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் ராமலிங்கம் ,கோவிந்தராஜன் , மாநில செயலாளர்கள்கல்யாணசுந்தரம் ,முருகானந்தம் கா.இளங்கோவன் ,இரா.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம்மாநிலத் தலைவர்பி.கே. சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment