Thursday, September 09, 2021
இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது பாருக், தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம், முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் குடந்தை ரஹ்மத்துல்லாஹ், ஜமயத்துல் அஹ்லில் குராண் வல்ஹாதிஸ் (JAQH) மாவட்ட தலைவர் எம்.பி.முஹம்மது, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் கண்டன உரையில் டெல்லியில் நடைபெற்ற பெண் காவலர் சபியாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் கற்பழிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட்டு மரண தண்டனை விதிக்க வேண்டும் இந்த வழக்கை உரிய முறையில விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிகையை வழியுருத்தினர்
மேலும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பத்திரிகையாளரை சந்தித்தது உண்டா பாஜக ஒன்றிய அரசு பதவியேற்றதில் இருந்து இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது இந்தியவின் சுதந்திர போரட்டத்திற்க்கு முக்கிய பங்கு வகித்தது முஸ்லீம்கள் என்பதை மறந்துவிட்டார்கள் இந்திய தாய்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றால் பாஜக ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பினால் தான் முடியும் என கண்ட ஆர்பட்டத்தில் பேசினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்.பகுதி செயலாளர்.
ரஃபயுதீன், கமால், நாசர், பாஷா, மகபூப் பாஷா, முகமது ஜாகீர், ராஜாமுகமது, இஸ்லாமிய அழைப்பாளர். ஷாகுல் ஹமீது. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் கலீலுர் ரஹ்மான் நன்றி கூறினார்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment