Sunday, February 09, 2020
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தினர்
திருச்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு மாநில தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது...... தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் வாகன ஓட்டுநர்களை மரியாதை குறைவாக நடத்துகின்றனர். மேலும் தகாத வார்த்தையால் பேசுகின்றனர். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சங்க பொதுச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்....... ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் இரா.தாஸ் பேசும்போது.... ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்றி வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இல்லையெனில் பிப்ரவரி இறுதி வாரத்தில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார். கூட்டத்தில் மாநில தலைவர் நடராஜன், மாநில பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*திருச்சி எல்பின் நிறுவனத்தின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் திருவெங்கடம் யாதவ் பரபரப்பு புகார்* .
அவர் நமது நிருபரிடம் தெரிவித்தபோது
நான் 2017 ஆம் ஆண்டு எனது நண்பன் மணியின் மூலம் எல்பின் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் வெறும் ரூபாய் 5000 மட்டும் கட்டினேன். அதற்கு இரண்டாவது நாளில் 3000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொடுத்தனர். அடுத்த நாள் முதல் பேங்க் கமிஷன் 10 ரூபாய் போக தினமும் 40 ரூபாய் அக்கவுண்டில் ஏறியது. இதனால் மணி என்பவர் மீண்டும் 55 ஆயிரம் கட்டி ஷேர் ஹோல்டர் ஆகுங்கள் என கூறியதன் பேரில் ரூபாய் 55 ஆயிரம் கட்டினேன். அதற்குரிய கமிஷன் பணம் அக்கவுண்டில் சரியாக ஏறியது. அதனால் எல்பின் நிறுவனம் நல்ல நிறுவனம் நம்பிக்கை அந்நிறுவனம் என்று என் மனதில் எண்ணம் தோன்றியது . இது அவர்கள் செய்யும் தந்திரம் என தெரியாமல் போனது.
சிறிது நாளில் ELFIN தலைவர் ராஜா என்னும் அழகிரிசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் பங்குதாரராக ரூபாய் 5 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறினார். நான் ராஜா என்னும் அழகிரிசாமியிடம் உங்கள் டீம் லீடர்கள் கீழ் பணிபுரிய மாட்டேன் நான் நேரடியாக உங்களிடம் தான் பணம் கட்டுவேன் என கூறினேன் .இத நம்பி நானும் ரூ.4.5000/- பணத்தைக் கட்டினேன் திருச்சி சங்கம் ஹோட்டலில் வைத்து ராஜாவிடம் நேரடியாக கொடுத்தேன். இதை மேடையில் அறிவிப்பேன் என கூறினார், ஆனால் பல நிகழ்ச்சிகளையும் அவர். மேடையில் கூறவில்லை.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ரூபாய் 5000 ரூபாய் 55 ஆயிரம் இந்த 4.50 லட்சம் இதற்கும் இவர்கள் ரசீது அல்லது ஆவணங்கள் எதுவும் வழங்கவில்லை. நானும் முதல் 5000 மற்றும் 55 ஆயிரம் பணம் திரும்ப முறையாக கிடைத்தால் இதை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் சிறிது நாட்களில் ராஜாவின் பேச்சு மாறியது. என்னை தாக்குவதற்கு, நமது கம்பெனியை அழிப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள் என சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு திருச்சி மன்னார்புரம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக அலுவலகம் திறந்த பின்பு காவல்துறையை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர்கள் எஸ்.எஸ்.ஐ கள் என பலரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார்கள். கம்பெனியின் ட்ரெண்டு மாறத்தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு நான் முதலீடு செய்தது இன்றைய தேதி வரை ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்க. நானும் தற்போது ஆறு மாதமாக தொடர்ந்து போராடி வருகிறேன். நடுவில் போனிலும் நேரிலும் சென்று கேட்டபோது பில் இருக்கா ஆவணங்கள் இருக்கா ஏதாவது கொண்டு வாருங்கள் உடனடியாக பணம் தருகிறோம் என இல்லாத ஒன்றை கேட்டு விரட்டி விட்டார்கள். தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் நான் அனுப்பினேன் ஆனால் 5. 2. 20 வரை எனது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கடந்த ஆறாம் தேதி நான் நேரில் சென்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் எனது ஆதார் கார்டுகள் போன்றவற்றை காட்டி முறையாக நிறுவனத்தின் மீதும் அதன் நிர்வாக இயக்குனர் ராஜா (எ) அழகிரிசாமி, ரமேஷ், மற்றும் புதிதாக உள்ள சில இயக்குனர்கள் மீது புகார் மனு அளித்துள்ளேன். பாவம் அப்பாவி மக்கள் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தற்போது அறம் மக்கள் நல சங்கம் ஒன்றை உருவாக்கி உதவிகள் செய்து நல்லவர்கள் போல் போலி மாயையை உருவாக்கி பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போடுகிறார்கள். டிவி, மக்கள் பத்திரிக்கை, விரைவில் தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.
இவர்களின் பணத்தால் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் மாநில அளவில் உள்ளவர்களை எல்லாம் தங்கள் கையில் வைத்திருப்பதாக இந்தத் தகவல்கள் தெரிய வருகிறது. யாரை எவ்வளவு பெரிய ஆட்களை (பணத்தால்) கையில் வைத்திருந்தாலும் இன்று நீங்கள் ஜெயிப்பது போன்று தோன்றும். ஆனால் உண்மை என்றும் தோற்காது என்று திருவேங்கடம் யாதவ் கூறியுள்ளார்.
Saturday, February 08, 2020
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிறுவனத்தில் பல்வேறு கவர்ச்சி டெபாசிட் திட்டங்களை அறிவித்து பல பெரிய ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி பணம் வசூலித்து வருகின்றனர்.
இந்நிறுவனம் குறித்து பல்வேறு புகார்கள் உள்ளன இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தஞ்சையில் எல்பின் நிதி நிறுவனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தஞ்சை தனியார் மண்டபத்தில் இதற்காக தஞ்சை எல்பின் நிதிநிறுவன லீடர் பிரசன்ன வெங்கடேஷன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதை அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் எல்பின் நிதி நிறுவனம் முறைப்படி இயங்குகிறதா இந்த கூட்டத்திற்கு யார் அனுமதி அளித்துள்ளார் என விசாரிக்க சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தஞ்சை பல்கலைக்கழக போலீசார் கூட்டத்தை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேசனை மேல் விசாரணைக்காக தஞ்சை மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் ஆவேசமடைந்த எல்பின் தலைவர் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் எல்பின் வாட்ஸ்அப் குரூப்களில் அனைவரும் ஒன்று திரண்டு நமது சக்தியை காவல்துறையினருக்கு எதிராக காட்டவேண்டும் ஒன்று திரண்டு வாருங்கள் என சட்டத்திற்கு விரோதமாக கூறினார். இவரது பேச்சை கேட்டு 200க்கும் மேற்பட்ட எல்பின் உறுப்பினர்கள் தஞ்சை எஸ்பி அலுவலகம் முன் அரசுக்கு எதிராக திரண்டனர். இதனால் எஸ்.பி அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது . இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்பு தஞ்சை மாவட்ட லீடர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் இருவர் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் உள்ள பொதுமக்கள் போலி நிதி நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் துறையினரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி ரம்யாஸ் ஓட்டலில் நந்தனம் மகாலில் இதே போல் ஓர் நிகழ்ச்சி இந்த எல்பின் போலி நிதி நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல தகவல்களுடன்
Friday, February 07, 2020
தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால் ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் முதலீட்டை 300 மடங்காக தரும் ஒரே நிறுவனம் என விளம்பரம் செய்து ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் எல்பின் நிறுவனம் குறித்து பல இடங்களில் புகார் அளித்து வருபவர் புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி.
இவர் நமக்கு அனுப்பிய வீடியோவில்
நான் தொடர்ந்து எல்பின் நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து திருச்சி ,புதுகை, தஞ்சை, மதுரை போன்ற மாவட்டங்களில் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். இதனால் என்னிடம் 50 லட்சம் வரை தருகிறேன் என பேரம் பேசினார்கள் வழக்குகளை வாபஸ் பெறக் கோரி. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என கூறியதால் என் மீது பல்வேறு பொய் வழக்கு பதிந்தார்கள். (பாலியல் வழக்கு உள்பட)
அதற்கும் உடன்படாததால் தற்போது திருச்சி சேர்ந்த அறம் மக்கள் நல சங்கம் பிரமுகர் எனக்கூறி பிரபாகரன் என்பவர் என்னை நீ சின்னப் பையன் நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் உனது கழுத்தை அறுத்து விடுவேன் கொலைமிரட்டல் விடுகின்றார்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையில் உள்ள எனக்கு பல்வேறு சோதனைகள் வேதனைகள் ஏற்படுகின்றது எல்லாம் ELFIN நிறுவனத்தின் பணத்தால் தான் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க ELFIN நிறுவனம் மட்டுமே காரணம்.
மேலும் பல தகவல்களுடன்
தைப்பூச விழாவையொட்டி சமயபுரத்தில் தெப்பத் திருவிழா.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஜனவரி 30 கொடியேற்றத்துடன் துவங்கிய விழா தினமும் ்இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
9 ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. அம்மன் தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
10 ம் நாளான நாளை காலை அம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி கொள்ளிடம் வடகாவிரியில் அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் தைப்பூசத்திற்க்கு சீர் வாங்கும் விழா நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் அருகே மதிமுக சார்பில் பொதுமக்களிடையே இந்திய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பாலக்கரை புதூர் காளியம்மன் கோவில் எடத்தெரு அருகே அருகில் மதிமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ரொகையா ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெல் ராஜமாணிக்கம் அன்புராஜ் ஜங்சன் பகுதி செயலாளர் பிரபாகரன் பொறியாளர் ஸ்டீபன் பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜஸ்டின் செல்லகுமார் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் பகுதிசெயலாளர்கள் துரை வடிவேல், எடத் தெரு சரவணன், ஜெயசீலன், பொன்மலைப்பட்டி கணேசன், அகமது கபீர், ரஜினி சிவா, கல்லுக்குழி பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் திருச்சி செல்லத்துரை, திமுக நாகராஜ், ஜமால், ராமமூர்த்தி, ஷாஜஹான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, February 06, 2020
கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை பழிவாங்கும் நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை, இடமாறுதல் உத்தரவு, தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கு வற்புறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. பெண்கள் பிரசவத்திற்கு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்த பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் தான் பெண்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டும். இதற்காக கிராம சுகாதார செவிலியர்களை அழைக்கக் கூடாது. தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி விபரம் குறித்த தகவலை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், இமெயிலில் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
துணை சுகாதார நிலைய மேம்பாட்டு நிதி, நிபந்தனையற்ற நிதி, கிராமக் குடிநீர் மற்றும் துப்புரவு குழு நிதிகளை மூன்று ஆண்டுகளாக முறையாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும். வாடகையில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பழுதடைந்த துணை சுகாதார நிலையங்களுக்கு வாடகை பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் திருச்சி எல்பின் நிதி நிறுவன மோசடி குறித்து
திருச்சி மாவட்டக் காவல்துறை ஆணையர் அவர்களிடம் அளித்துள்ள புகாரில்
(2013 ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது 2014 வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN)
மதுரையை தலைமையிடமாக கொண்டு 2013ல் பாதுஷா என்பவர் 2 பேர் பார்ட்னருடன் ஒரு கம்பெனியை தொடங்குகிறார். அங்கு நஷ்டக் கணக்கு காண்பித்து விட்டு தலைமறைவாகி 2014 சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வருதா மணி என்ற கம்பெனியை ஆரம்பிக்கின்றனர். அதில் இரண்டு பேர் பார்ட்னர் ஒருவர் ரமேஷ்குமார் மற்றவர் விஸ்வநாதன் செட்டியார் அதையும் மூடிவிட்டு 2017ல் இந்த எல்பின் நிறுவனத்தை ஆரம்பிக்கின்றனர் .
இதில் பங்குதாரர்கள் ரமேஷ்குமார், பாதுஷா இதுவும் சிறிது நாட்களில் வருமானவரி சோதனையில் சிக்கி மூடப்படுகிறது.
மறுபடியும் இதே எல்பின் நிறுவனத்தின் பெயரை வைத்து ஸ்பேரோ குளோபல் டிரேடிங், ஸ்பேரோ ரியாலிட்டி இந்த நிறுவன பங்குதாரர்கள் அறிவுமதி, பால்ராஜ், பாபு இவர்கள் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரே நம்பர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர்களைப் பற்றி புகார் அளித்தாலும் ஏதாவது தகவல் பரப்பினால் ஒன்று ஆள் வைத்து மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது அல்லது உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என செட்டில்மெண்ட் பேசுவது அவர்கள் வாயை அடைத்து இவர்கள் தொழிலை நன்றாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள். என்னைக் கூட திருச்சி அறம் மக்கள் நல சங்கம் சேர்ந்த மாநில பொறுப்பாளர் பிரபாகரன் என்பவர் நான் அறம் மக்கள் நல சங்கத்தில் உள்ளேன் நீங்கள் அனுசரித்துப் போனால் எப்படியும் இருக்கலாம் இல்லை என்றால் என்னை பற்றி தெரியாது கொலையும் செய்யத் தயங்க மாட்டேன் என மிரட்டி விட்டுச் சென்றார். தற்போது இவர்களை பாதுகாத்துக்கொள்ள 2015இல் வேற ஒரு நபர் பதிவு செய்த பத்திரிக்கையை 5 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர், அதேபோல் 25 லட்சம் கொடுத்து அறம் டிவி என்பதை வாங்கியுள்ளனர். பல குற்ற வழக்குகள் உள்ள ரமேஷ் எப்படி மக்கள் ராஜன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார் என்பது தெரியவில்லை.பணம் இருப்பதால் எதையும் சாதிக்கலாம் என நினைத்துக் கொண்டு உள்ளார் . தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போது மீடியாவை பயன்படுத்தி வருகின்றார். தற்போது இவர்களுடன் இருக்கும் கருப்பு பணத்தை மாற்ற ஏ ஆர் ரகுமான் அவர்களை வைத்து திருச்சியில் மாபெரும் இசை நிகழ்ச்சி வழங்க உள்ளார். முழுவதுக்கும் இவர்கள் ஸ்பான்சர் வழங்கியுள்ளனர். அதாவது 10,000 பேர் வந்தால் 10 லட்சம் பேர் வந்ததாக கணக்கு காட்டி கருப்பை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்பின் பற்றி மாற்றம் மக்கள் நல சங்கம் சார்பில் திருச்சி காவல்துறையிடம் பொதுமக்கள் 45 பேர் புகார் அளித்தனர் அந்த மாற்றம் மக்கள் நல சங்கத்தை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெருமையாக கூறி வருகிறார். தாது பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துள்ளார். நான் அவர்களுக்கு வளைந்து போகாததால் தான் எனது மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ரமேஷ் .காவல்துறை பொது மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்கிறேன்.
இவர்களிடம் (எந்தப் பத்திரிகையிலும் இல்லாமல் நான் பத்திரிகைகள் என கூறிக்கொண்டு ) காசு வாங்கி திங்கும் சில சமூக விரோதிகள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் யூட்யூப் களில் செய்திகள் போடும் நண்பர்களை சமூக விரோதிகள் என ரமேஷ் குமார் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வருவது வேதனையிலும் வேதனை.
மேலும் புதிய தகவல்களுடன் தொடரும்
திருச்சி மாவட்டக் காவல்துறை ஆணையர் அவர்களிடம் அளித்துள்ள புகாரில்
தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டுவரும் எல்பின் நிறுவனம் மாதம் தோறும் பெரிய ஹோட்டல்களில் தன தங்களது லீடர்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை வரவைத்து மூளைச்சலவை செய்து தொடர்ந்து கோடிக்கணக்கில் ஏமாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருச்சி BREEZE ஹோட்டலில் பல ஆயிரம் பேரை திரட்டி ஏமாற்றி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர்.
இந்த மோசடி ELFIN நிறுவனம் பற்றி நான் புதுக்கோட்டை தஞ்சாவூர் மதுரை திருச்சி என பல மாவட்டங்களிலும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். இவர்கள் நோக்கம் கொள்ளை அடிப்பது மட்டும்தான்.(2013 ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது 2014 வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN)
மதுரையை தலைமையிடமாக கொண்டு 2013ல் பாதுஷா என்பவர் 2 பேர் பார்ட்னருடன் ஒரு கம்பெனியை தொடங்குகிறார். அங்கு நஷ்டக் கணக்கு காண்பித்து விட்டு தலைமறைவாகி 2014 சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வருதா மணி என்ற கம்பெனியை ஆரம்பிக்கின்றனர். அதில் இரண்டு பேர் பார்ட்னர் ஒருவர் ரமேஷ்குமார் மற்றவர் விஸ்வநாதன் செட்டியார் அதையும் மூடிவிட்டு 2017ல் இந்த எல்பின் நிறுவனத்தை ஆரம்பிக்கின்றனர் .
இதில் பங்குதாரர்கள் ரமேஷ்குமார், பாதுஷா இதுவும் சிறிது நாட்களில் வருமானவரி சோதனையில் சிக்கி மூடப்படுகிறது.
மறுபடியும் இதே எல்பின் நிறுவனத்தின் பெயரை வைத்து ஸ்பேரோ குளோபல் டிரேடிங், ஸ்பேரோ ரியாலிட்டி இந்த நிறுவன பங்குதாரர்கள் அறிவுமதி, பால்ராஜ், பாபு இவர்கள் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரே நம்பர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர்களைப் பற்றி புகார் அளித்தாலும் ஏதாவது தகவல் பரப்பினால் ஒன்று ஆள் வைத்து மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது அல்லது உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என செட்டில்மெண்ட் பேசுவது அவர்கள் வாயை அடைத்து இவர்கள் தொழிலை நன்றாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள். என்னைக் கூட திருச்சி அறம் மக்கள் நல சங்கம் சேர்ந்த மாநில பொறுப்பாளர் பிரபாகரன் என்பவர் நான் அறம் மக்கள் நல சங்கத்தில் உள்ளேன் நீங்கள் அனுசரித்துப் போனால் எப்படியும் இருக்கலாம் இல்லை என்றால் என்னை பற்றி தெரியாது கொலையும் செய்யத் தயங்க மாட்டேன் என மிரட்டி விட்டுச் சென்றார். தற்போது இவர்களை பாதுகாத்துக்கொள்ள 2015இல் வேற ஒரு நபர் பதிவு செய்த பத்திரிக்கையை 5 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர், அதேபோல் 25 லட்சம் கொடுத்து அறம் டிவி என்பதை வாங்கியுள்ளனர். பல குற்ற வழக்குகள் உள்ள ரமேஷ் எப்படி மக்கள் ராஜன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார் என்பது தெரியவில்லை.பணம் இருப்பதால் எதையும் சாதிக்கலாம் என நினைத்துக் கொண்டு உள்ளார் . தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போது மீடியாவை பயன்படுத்தி வருகின்றார். தற்போது இவர்களுடன் இருக்கும் கருப்பு பணத்தை மாற்ற ஏ ஆர் ரகுமான் அவர்களை வைத்து திருச்சியில் மாபெரும் இசை நிகழ்ச்சி வழங்க உள்ளார். முழுவதுக்கும் இவர்கள் ஸ்பான்சர் வழங்கியுள்ளனர். அதாவது 10,000 பேர் வந்தால் 10 லட்சம் பேர் வந்ததாக கணக்கு காட்டி கருப்பை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்பின் பற்றி மாற்றம் மக்கள் நல சங்கம் சார்பில் திருச்சி காவல்துறையிடம் பொதுமக்கள் 45 பேர் புகார் அளித்தனர் அந்த மாற்றம் மக்கள் நல சங்கத்தை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெருமையாக கூறி வருகிறார். தாது பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துள்ளார். நான் அவர்களுக்கு வளைந்து போகாததால் தான் எனது மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ரமேஷ் .காவல்துறை பொது மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்கிறேன்.
இவர்களிடம் (எந்தப் பத்திரிகையிலும் இல்லாமல் நான் பத்திரிகைகள் என கூறிக்கொண்டு ) காசு வாங்கி திங்கும் சில சமூக விரோதிகள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் யூட்யூப் களில் செய்திகள் போடும் நண்பர்களை சமூக விரோதிகள் என ரமேஷ் குமார் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வருவது வேதனையிலும் வேதனை.
மேலும் புதிய தகவல்களுடன் தொடரும்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ம...