Wednesday, February 19, 2020

On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒர் சட்டமா ? பொதுமக்கள் குழப்பம்.

தொடர்ந்து எல்பின் நிறுவனம் பற்றி செய்தி வெளியிட்டு வரும் சத்தியமூர்த்தி அனுப்பிய வீடியோவில்


நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரிஸ் ரெசிடென்சி ஹோட்டலில் எல்பின் நிறுவனத்தினர்  அதிகாலை 4 மணிக்கு தமிழகத்திலுள்ள டாப் மோஸ்ட் லீடர்கள் 200 பேரை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி உள்ளனர். இந்த தகவல் அறிந்து நான் முதல் நாள் இரவே எஸ்பி ,கமிஷனர் இருவரையும் தொடர்பு கொண்டேன்

ஆனால் அவர்களது தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அவசர போலீஸ் 100 எண்ணில் தொடர்பு கொண்டேன் அவர்கள் முலம்  கன்டோன்மென்ட் காவல் நிலைய அதிகாரி தொடர்பு கொண்டார். இந்த நிறுவனம் பற்றி புகார் அளித்து உள்ளீர்கள் என என்னிடம் கேட்டார் நான் கமிஷனர் மற்றும் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளேன் எனக் கூறினேன் சரி சென்று பார்க்கிறேன் என கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டேன் அவர் நான் சென்று பார்த்து விட்டேன்  இன்டோர் மீட்டிங் நடத்த பர்மிஷன் தேவையில்லை. வெளியில் மேடை அமைப்பு அவர்கள் கூட்டம் நடத்தவில்லை. அரங்கத்துக்குள் கூட்டம் நடத்த யாரிடமும் அனுமதி வாங்க அவசியமில்லை எனக் கூறினார். நான் தஞ்சையில் புகார் அளித்ததன் பேரில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அவர்கள் முறைகேடாக கூட்டம் நடத்துவதால் எங்கும் அனுமதி இல்லை என கூறினேன். மீண்டும் அவர் ஒரே பதிலை கூறினார் அவர் பேசிய ஆடியோ இதில் பதிவிட்டுள்ளேன்.


ஒரே மாநிலத்தில் ஒரே டிஜிபி உள்ள காவல் துறைக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சட்டமா ? தஞ்சைக்கு ஒரு சட்டம், திருச்சிக்கு ஒரு சட்டம், புதுகைக்கு ஒரு சட்டமா? இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எல் பின் நிறுவனம் ஓர் ஏமாற்று நிறுவனம். பொதுநலன் கருதி நான் இவர்கள் மீது புகார் அளித்து வருகின்றேன். எல்பின்  நிறுவனம் மூடிய பின்பு காவல்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தார் எந்த ஆதாரமும் இல்லாத நிறுவனத்தில் எப்படி பணம் போட்டீர்கள் என காவல்துறையினர் கேட்பார்கள் அதற்கு வழிவிடாமல் முன்பே காவல்துறை தடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். பாவம் பொதுமக்கள் தங்களது கஷ்டத்தில் ஒன்றுக்கு மூன்றாக கிடைக்கிறது என்று நம்பி பணம் போடுகிறார்கள். பணம் படைத்தவர்கள் எதிர்த்து பொது நல வழக்கு தொடர்ந்து அவர்கள் பலர் காணாமல் போனது எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் டிஜிபி அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் . ஜெய்ஹிந்த்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


( தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது)


On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 19.02.2020

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து  காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலை  தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சமையல் கியாஸ் சிலிண்டருடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி வட்ட தலைவர் சுகுமார், புள்ளம்பாடி வட்ட தலைவர் அர்ஜுனன், நகரத் தலைவர்கள் செல்வகுமார், அய்யாவூ, INTCU மாவட்ட தலைவர் துரைராஜ், மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி காங்கிரஸார் என 100-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்..

பேட்டி:  கலை(வடக்கு மாவட்ட தலைவர்)
On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 19-02-2020

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ஆட்சியர் அலுவலகம்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சியிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முழக்கப் போராட்டம், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

 இந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி ஜமாத்துல் உலமா அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி ஜமாத்துல் உலமா தலைவர் ரூஹில் ஹக் தலைமை வகித்தார். இதில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தக் கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அதற்கான பலனை அதிமுக அனுபவிக்க நேரிடும் என்று போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, February 18, 2020

On Tuesday, February 18, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பட்டா  கத்தியுடன் திரிந்ததால் திருச்சியில் பரபரப்பு

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே மத்திய அரசுக்கு எதிராக முஸ்லிம் மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

அங்கிருந்து வரும் வழியில் புத்தூர் நால்ரோடு  இடத்திற்கு அருகே மீன் மார்க்கெட்  உள்ளது மீன் மார்க்கெட் அருகே அமைந்துள்ள டீக்கடை முன்புறம் ஒரு நபர் குடிபோதையில் பட்டாக்கத்தி உடன் திரிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது
On Tuesday, February 18, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப்17

சென்னையை திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரவில் கூடிய 600க்கும் மேற்பட்ட
மாணவர்கள் -  தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிப்பு

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில்
இஸ்லாமிய கட்சியினர், அமைப்புக்கள், பல்வேறு கட்சியினர் தொடர்ந்து
போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு சி.ஏ.ஏ க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்
கடந்த 15ம் தேதி திடீரென  (சனிக்கிழமையன்று)
இஸ்லாமிய மாணவர்கள்
600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 போலீசார்
சமாதானப் பேச்சுவார்த்தையில் நடத்தினர். ஆனால் மாணவர்கள்
சட்டமன்ற கூட்டத்தொடரில் சி.ஏ.ஏவை
அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம்  நிறைவேற்றும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள ஜமாத்தார்  அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி திங்கட்கிழமை (இன்று) உங்களது கோரிக்கையின் படி சி.ஏ.ஏ எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் இந்த கூட்டத்தை விட்டு விடுவோம் அல்லது தொடர்வோம் என கூறி கூட்டத்தை கலைந்து போக வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்
சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் கூறியதையடுத்து 300க்கு மேற்பட்ட மாணவர்கள் திடீரென இரவு தென்னூர் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு கூடியவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த இடத்தை விட்டு கலையாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.


Monday, February 17, 2020

On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ?
மாவட்ட காவல் துறையா ?
எல்பின்  ராஜாவா ?  ...

  திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி பல நூறு கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின்


இந்த நிறுவனம் பல மாவட்டங்களில் பெரிய பெரிய ஸ்டார் ஓட்டல்களில் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்வது வாடிக்கையாக நடைபெறும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் கூட்டம் ஏற்பாடு செய்திருந்த டீம் லீடர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவரை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து தமிழகமெங்கும் போலீசார் இவர்கள் ஹோட்டல்களில்  கூட்டம் நடத்த தடை விதித்துள்ளானர்  என தகவல்.


இந்நிலையில் தற்போது திருச்சியில் 18. 2. 2020 செவ்வாய் அன்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஓட்டலில் நடைபெறவுள்ள அதி முக்கிய  கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய 200 லீடர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என எல்பின் நிறுவன தலைவர் அழகர்சாமி ( எ ) ராஜா ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போனில் அழைத்து கூறியுள்ளார்.
காலை 9 மணிக்கு கூட்டம் முடிந்து விடும் அதன் பிறகு அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்று விடலாம் என்றும் கூறியுள்ளாராம்.
அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை இந்நிறுவனம் கூட்டம் நடத்த தடைவிதித்து இருப்பதால் காவல்துறைக்கு தெரியாமல் அதிகாலையில் இக்கூட்டத்திற்கு எல்பின்  நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
காவல் துறையை மீறி இந்த கூட்டம் நடைபெறுமா என எல்பின் லீடர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக தகவல் .

நடத்த விடுவார்களா திருச்சி மாவட்ட காவல்துறையினர் ?
On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    


*ரிசர்வ் வங்கி கூட கொடுக்க முடியாத வட்டியை கொடுக்கும் திருச்சி எல்பின் நிறுவனம்.*

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தொடர்ந்து மோசடி வழிகளில் பணம் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின் நிறுவனம் ஆகும்.

தற்போது மாநகரங்களில் காவல்துறையினர் என்பின் நிறுவனத்தினர் கூட்டம் நடத்த தடை விதித்து இருப்பதால் கிராம புற மக்களை கோடிஸ்வரர்  ஆக்கலாம் என தனது டீம் லீடர்களிடம் கூறி கிராமங்களில் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று மூளை சலவை செய்து வரும் பணி நடைபெற்று வருகிறது தற்போது.
புதிதாக தற்போது எல்பின் டிராவல்ஸ் என்று ஒன்றை ஆரம்பித்து
(இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் ? எந்த முகாந்திரம் வைத்து இந்த ட்ராவல்ஸ் ஆரம்பிக்கப்பட்டது  யார் யார் துபாய் செல்ல உள்ளனர் யார் யார் இந்தியா திரும்ப உள்ளனர் ? என மத்திய புலனாய்வு பிரிவு  போலீசார் விசாரிக்க வேண்டும் ) வரும் மார்ச் 3ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நபர்களை துபாயில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் வர்த்தக கூட்டம் நடத்த உள்ளதாக கூறி தலைக்கு ஒரு லட்சம் கட்ட வேண்டும் அப்படி கட்டுபவர்களுக்கு துபாய் டூர் மற்றும் அவர்களது வங்கி கணக்கில் தினமும் 550 ரூபாய் என ஒரு வருடம் பணம் ஏறும் அதாவது ஒரு லட்சம் போட்டால் ஒரு வருடத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம் என நோட்டீஸ் அடித்து மூளை சலவை செய்து வருகின்றனர்.. இதுபோல் பணம் கட்டியவர்கள் பலரும் தற்போது திரும்ப பணம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதலில் தினமும் பணம் ஏறியது, பிறகு வாரம் ஒரு முறை ஏறியது, பிறகு மாதம் ஒரு முறை அதன்பின் அதுவும் இல்லை என பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இன்று கிடைத்த தகவலின்படி இந்நிறுவனத்தின் தலைவர் அழகர்சாமி (எ) ராஜா வரும் 24ஆம் தேதி அல்லது ஏதோ மார்ச் அல்லது மே 24 ஆம் தேதி அன்று முன்னணி கட்சியின் மாநில பதவி பெறப் போவதாகவும் அதன்மூலம் நமது நிலை மேலும் உயர போவது என்றும் காவல்துறை நமது பின்னால் நிற்கும்  என்றும் தனது டீம் லீடர் களிடம் உறுதியாக கூறி வருகிறாராம். தற்போது தஞ்சையில் கைதான பிரசன்ன வெங்கடேஷ் அவர்களுக்கு ஜாமின் கூட கிடைக்கவில்லை .அவரது புகைப்பட கலைஞர்கள் மூலம் தஞ்சை நடைபெற்ற கூட்டங்கள் அதன் புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங்ஸ் பெற்று தஞ்சை போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் பல டீம் லீடர் விலகி போக உள்ளதாக வந்த தகவலை அடுத்து ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இதுபோன்ற தகவலை பரப்பி வருகின்றாராம். டீம் லீடர் களை குஷிப்படுத்தி கிராமப்புற மக்களை மூளை சலவை செய்து வேறு வழியில் பணம் சம்பாதிக்க செல்ல உள்ளனர் இதை உடனடியாக பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஜெய்ஹிந்த்.
என சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய வீடியோவில் கூறியுள்ளார்.

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி  17.02.2020

திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மக்கள் பணி விரைவாக செய்திட வழிவகை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
                                                                              திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். கூட்டம் அரங்கில் அமர வைக்கப்பட்ட அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சந்தித்தார்.
அப்போது கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டாக அவரிடம் மனு அளித்தனர்.

 ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகள் செய்யும்போது தாமதம் ஏற்படுகிறது.

எனவே பழைய முறைப்படி ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையை கையாளும் அதிகாரத்தை தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பரிவர்த்தனை முறையானது மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். எனவே அதனை மாற்ற இயலாது. அதேசமயம் ஆன்லைன் பரிவர்த்தனையில் சில இடங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கிராம ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மன் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பண பரிவர்த்தனையால் பல பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பணியை விரைவாக செய்ய பழைய முறைப்படி காசோலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் கையொப்பமிடும் அதிகாரத்தை வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் விரைவாக கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் விரைவில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Sunday, February 16, 2020

On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள்


புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ.



எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ச்சியாக இவர்கள் சதுரங்க வேட்டையில் ஈடுபடுகிறார்கள்

நான் தொடர்ந்து ELFIN நிறுவனத்தின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் வீடியோ வெளியிட்டு வருகின்றேன். இதனைத் தொடர்ந்து காவல்துறை துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனம் திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற இருந்த கூட்டத்தை தடை செய்தனர்.
தற்போது எல்பின் நிறுவனத்தினர் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி அந்தந்த திருடர்கள் அவர்களின் இல்லத்திலேயே கூட்டம் நடத்த சொல்லி அறம் மக்கள் நல சங்கம் தலைவர் அழகர்சாமி (எ)ராஜா மற்றும் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணமாக உள்ள டீம் லீடர்களை பின்தொடர்ந்து விசாரித்தால் இவர்களை விசாரிப்பது மிகவும் சுலபம். மிகவும் துரிதமாக செயல்பட்டுவரும் காவல்துறை அதிகாரிகள் இந்த டீம் லீடர்களைLock லாக் செய்தாலே போதும் இந்த நிறுவனத்தை முற்றிலும் முடக்கி விடலாம் என்பது என் கருத்து . ஜெய்ஹிந்த்