Wednesday, March 04, 2020
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
ஒன்றாக பயணித்து
ஒன்றாக மரணித்த நண்பர்கள்...
தமிழகத்தில் வேலூரைச் சேர்ந்த செந்தில் குமார் (36), திருச்சியை சேர்ந்த ராம் குமார் (30), முத்துப்பேட்டை சேர்ந்த சுபாஷ் குமார் (29). அபுதாபியில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் உற்ற நண்பர்கள்..
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேலை விஷயமாக ஒமான் சென்ற நண்பர்கள் மூவரும் எல்லையில் சான்றிதழ் பிரச்சினையால் ஒமானுக்குள் நுழைய முடியாது திரும்பவும் அபுதாபி திரும்பி வரும் வழியில் அல் அய்ன் எனுமிடத்தில் இவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்...
மருத்துவமனை நடவடிக்கை , தூதரக சான்றிதழ்கள் விரைந்து பெற்று #அஷ்ரப்_தாமரசேரி தவைமையிலான தன்னார்வ தொண்டர்கள் மூன்று பேரின் உடல்களையும் ஒரே விமானத்தில் சென்னை அனுப்பி வைத்தனர்..
எதிர்கால கனவுகளோடு குடும்பத்தை பிரிந்து அரபுலகில் வேலைக்கு சென்று விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள்

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டத்தை ஆதரித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் இந்து முன்னணி சார்பில் இன்று திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் எதிரே குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஒருநாள் தொடர் நாமாவளி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், உறையூர் பகுதி செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இஸ்லாமியர்களை தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்து முன்னணியினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி: முருகானந்தம், இந்து முன்னணி, மாநில பொதுச் செயலாளர்.
இந்த வகையில் இந்து முன்னணி சார்பில் இன்று திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் எதிரே குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஒருநாள் தொடர் நாமாவளி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், உறையூர் பகுதி செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி: முருகானந்தம், இந்து முன்னணி, மாநில பொதுச் செயலாளர்.
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 5-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் ஜொலிக்கும் தெப்பம்

*திருச்சியில் உறையூர் பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் ருத்ர ஹோமம் நடைபெற்றது*
ருத்ர ஹோமம் என்றால் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைப் புரியும் மும்மூர்த்திகளுள் ஒருவர், சிவபெருமான். சிவபெருமானின் அம்சமே ருத்ர மூர்த்தி வடிவம் ஆகும். ரிக் வேதம், ருத்ரனை, “வல்லவருக்குள் வல்லவர்” எனப் போற்றுகிறது. இந்த சக்தி வாய்ந்த ருத்ரனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஹோமமே, ருத்ர ஹோமம் ஆகும்.
ருத்ரனை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் இந்த ஹோமம், பயம் மற்றும் கவலையைப் போக்கி, பாதுகாப்பை அளிக்க வல்லது. ருத்ரனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது. மேலும், நவக்கிரகங்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஒன்பது கோள்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து, நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காகவும், இது மேற்கொள்ளப்படுகின்றது. இப்படிப்பட்ட ஹோமத்தை சிவாச்சாரியார்கள் இன்று பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் ஹோமம் வளர்த்தனர்

திருச்சி: மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த 11 மாதக் குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா வரும் அனைத்து விமானப் பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலும் மருத்துவக்குழுவினர் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது மூன்று பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் திருச்சி விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ற 11 மாதக் குழந்தை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தா் ராஜன், சேலத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த கொரோனா வைரஸ் நோய்க்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களைத் தாக்கியிருப்பது கொரோனா வைரஸா? அல்லது வேறு ஏதும் வைரஸா? என்பதை கண்டறிவதற்காக ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக மிரட்டல் ஆடியோ ELFIN சகோதரர்கள் இன்றைக்கு துபாயிலிருந்து அழகர்சாமி என்கிற ராஜா மிரட்டல் ஆடியோ தஞ்சை காவல்துறை தொடர்ச்சியாக நம்மீது பொய்யான
புகாரின் அடிப்படையில் வழக்கு போட்டும் மேலும் வழக்கு போடுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள் இதனை முறியடிக்கும் வகையில் காவல்துறை யாரை அழைத்தாலும் அதை ஆடியோ பதிவு செய்யுங்கள்
நமது வழக்கறிஞரை அழைத்து சென்று விசாரணை நடத்தும் போது அதையும் வீடியோ பதிவு செய்யுங்கள் காவல்துறைக்கு தக்க தண்டனை வாங்கித் தருவோம் இன்று துபாயில் இருந்து மிரட்டல் ஆடியோ காவல்துறைக்கு எதிராக அழகர்சாமி என்கிற ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார் இதற்கு காவல்துறை அடுத்த நடவடிக்கையாக என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )
இத்தனை நிறுவனங்கள் நடத்தி ஏமாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, March 03, 2020
On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழில் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் வலியுறுத்தல்

தமிழக அரசே எங்கே எனது வேலை என கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 21ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை 1 கோடி இளைஞர்களை சந்தித்து கையெழுத்து இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் மாவட்ட மணிகண்ட ஒன்றியத்தின்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
சார்பில் திருச்சி சோமரசம்பேட்டையில் மாவட்ட துணை தலைவர் ராஜா முகமது தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கை எழுத்து
இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த், விவசாய அணி செயலாளர் துரைப்பாண்டியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார்,
திமுக ஊராட்சி செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி
தமிழகத்தில் 96 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், மேலும் வேலைவாய்ப்பற்ற காலங்களில் இளைஞர்களுக்கு நிவாரண நிதியாக ரூ 10 ஆயரம் வழங்க வேண்டும், மேலும் அரசாணை எண்
56ஐ ரத்து செய்ய வேண்டும்,
மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வங்கி, ரயில்வே துறை உள்ளிட்ட பணிகளில் தமிழக இளைகளுக்கு முன்னுரிமை வழங்க
வேண்டும் என கூறினார்

சமூகப் பொறுப்புத் திட்டத்தில் தேர்ப்பேட்டை ஏரியைப் புனரமைத்தது கேட்டர்பில்லர்
சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் ஓசூர் அருகிலுள்ள கிராமமக்களுக்காக தெர்பேட் ஏரியை கேட்டர்பில்லர் நிறுவனம் புனரமைத்துக்கொடுத்துள்ளது
கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனத்தின் தொழிற்துறை மின்சாதனங்கள் தயாரிப்பு (IPSD) ஆலையின் அருகில் உள்ள கிராமப்பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த டிச.17, 2018ல் இந்தத்திட்டத்தை கேட்டர்பில்லர் நிறுவனம் தொடங்கியது. இந்தத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்பு இந்த ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.
எட்டு ஏக்கர் நிலம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குடிமராமத்து செய்யப்பட்டு பாதைகள் மற்றும் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு முதல் சமூகப்பொறுப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று ஐபிஎஸ்டி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் ரமேஷ் முத்துராமன் தெரிவித்தார். நகர்ப்புறங்களில் உள்ள பல்வேறு ஏரிகள் கடுமையாக மாசுபட்டுள்ளன என்றும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும், வறட்சியை எதிர் கொள்வதிலும் ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைப்பது முக்கியமான நடவடிக்கை என நாங்கள் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாம் வாழும் மற்றும் பணிபுரியும் இடங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூழலியல் சமநிலையை நிலை நிறுத்து வதற்கான வாய்ப்பு என்பதால், தேர்ப்பேட்டை ஏரியை புனரமைப்பதற்கு முதலீடு செய்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
தரமான கல்வி, தூய்மையான குடிநீர், தூய்மை விழிப்புணர்வு மற்றும் சுகாதார கட்டமைப்புகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித்தருவது, ஆலைகள் அமைந்துள்ள சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக செலவிடுவது உள்ளிட்ட சமூகப்பணிகளை மேற்கொள்வதில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.
இந்தத்திட்டத்தை துவங்கும் முன்னர் இந்த ஏரியின் சுத்திகரிக்கப்படாத நீர் பாசி படிந்து மிகவும் அழுக்காகக்காணப்பட்டது. இந்த நிலையில் ஏரி மற்றும் அதனைப் பயன்படுத்தும் பொது மக்களைப் பாதுகாக்கும் மற்றும் ஏரிப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பான, அழகான மற்றும் குப்பைக் கூளங்களற்ற பகுதியாக மாற்றும் திட்டத்தை கேட்டர்பில்லர் நிறுவனம் முன்னெடுத்தது.
குடிமராமத்துப் பணிகளுடன் ஏரி நீரும் சுத்திகரிக்கப்பட்டதை அடுத்து இந்த ஏரியின் நீர்த்தேக்கத்திறன் 61 மில்லியன் லிட்டராக அதிகரித்தது. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் தற்போது இந்த ஏரி 1500 குடும்பங்களுக்கு பயன்பட்டு வருகிறது. கரைப்பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் விதமாககற்கள் பதிக்கப்பட்டு ஏரியைச் சுற்றிவலை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் விளக்குகளும் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1930ம் ஆண்டிலிருந்தே கேட்டர்பில்லர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 11,000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரது மளிகைக் கடையின் உள்ளே நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் வெடிகுண்டு வெடித்ததில் கடையில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயமடைந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து புஷ்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...