Tuesday, March 17, 2020

On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜான்சன் லிப்ட் நிறுவனம் சார்பில் நடந்த இந்த இரு சக்கர வாகன  பேரணியை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் விக்னேஸ்வரன் தொடங்கி வைத்தார்.


இந்த பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு, தென்னூர் ஹை ரோடு வழியாக தில்லை நகரை சென்றடைந்தது. இந்த பேரணியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக சாலை விதிகளை மீற மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பேட்டி:
 ஜான்சன் நிறுவன திருச்சி கிளை மேலாளர் கமலக்கண்ணன்
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில்

திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி கீழே புலிவார்டு ரோடில்  அமைப்பின் நிறுவன தலைவர் அந்தமான் சுப்பிரமணியன் இந்த தண்ணீர் பந்தலை திறந்து வைத்து ஏழை எளியவர்களுக்கு வழங்கினார். இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. முதலாவது ஆண்டாக இந்த தண்ணீர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை தினமும் இந்த தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு மக்கள் தாகம் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சேகர், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் காட்வின், முபாரக், சந்தோஷ் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த தண்ணீர் பந்தல் மூலம் கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல நூறு கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்
இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி , எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவர் மீதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்  காவல்துறை குற்றப்பிரிவில்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தஞ்சையில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய லீடர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை டிஎஸ்பியை மிரட்டி அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததாக கூறி வருகின்றனர்.
தற்போது மதுரையிலும் வழக்கு பதிவு  செய்யாமல்  இருக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேசி சரி செய்து விட்டதாக அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் முழுவதும் ELFIN
ஆலோசனை கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். முதலில் திருச்சியில் மாபெரும் கூட்டத்தை நடத்தி பின்னர் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
எல்பின் நிறுவனத்தின் சார்பில் ஒன்று கொடுத்தால் மூன்று என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தந்தால் 3 லட்சம், 3 லட்சம் தந்தால் 9 லட்சம், 10 லட்சம் தந்தா 30 லட்சம், ஒரு கோடி கொடுத்தால் 3 கோடி என்ற இந்த மாய வலையில் சிக்கிய பணம் கட்டியவர்களுக்கு  இதுவரை எந்த செக்கும் பாஸ் ஆகவில்லையாம். இதனால் தற்போது எல்பின்  நிறுவனத்திற்குள் தற்போது புகைச்சல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்.

தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு இவர்களது முகமூடியைக் கிழித்து எல்பின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி  மற்றும் எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் அவர்களது கூட்டாளிகள்  பினாமிகள் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் ம்ற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டித்தெருவை

சேர்ந்த சரவணகுமார்  என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தார் சில நாட்களுக்கு முன்பு நான் வளர்த்த ஆடுகளை  அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடி சென்றதாகவும் இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் செய்தும் Pending நிலையில் உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்  என்னுடைய ஆடுகளை கடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கூறியுள்ளனர்.
On Monday, March 16, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி துறையூர் கோவிந்தபுரம் பகுதி சார்ந்த மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு சேர்த்து நபர்களை நீக்கம் செய்து அளந்து கொடுத்தல் சம்பந்தமாக கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்


துறையூர் வட்டம் கோவிந்தபுரம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு 1995 1996இல் ஆதிதிராவிடர் நலத்துறை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் வெளியூர் நபர்கள் உள்ளவர்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளனர் அதனால் அந்த ஊரில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு 202 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது மேற்படி அரசால் கொடுக்கப்பட்ட 202 பட்டாவில் சுமார் 50 நபர்களுக்கு வெளியூர் சார்ந்தவர்களாவர் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நலம் கருதி துறையூர் கோவிந்தாபுரம் மக்களுக்கு முறையாக பட்டாவை நில அளவையும் செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்
On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா  குறித்து அரசு சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது.


இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
 திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 இந்த அமைப்பு தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யோகா குரு கிருஷ்ணகுமார், திருச்சி மாவட்ட பணத்தாள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை அளித்தனர்.
On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.



 சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
 மூன்று ஆண்டுகள் பணி முடித்த ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு சம்பள மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய மாதம்  1000 ரூபாய் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 37வது வணிகர் தின மாநாடு மே மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா
தலைமையில் நடைபெற்றது.

சிறப்புறையை
மாநிலத் தலைவர்  வெள்ளையன் வழங்கினார்.
பின்னர்  செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த அவர்

சென்னையில் வருகிற மே 5ஆம் தேதி வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளது இதில் முதல் முறையாக அரசியல் கட்சித் தலைவர்களையும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளோம். கட்சித் தலைவர்கள் சார்பில் யார் வந்து வேண்டுமானாலும் பேசலாம், இந்த மாநாட்டில் நாங்கள் எந்தவித கோரிக்கையும் மத்திய, மாநில அரசுக்கு வைக்க போவதில்லை, அதற்கு மாறாக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் இந்த முடிவுகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
காந்திய வழியில் எங்களது முடிவு இருக்கும் என கூறினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sunday, March 15, 2020

On Sunday, March 15, 2020 by Tamilnewstv in    
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளை வைத்து பணியிலிருக்கும் காவல் அதிகாரியின் சொத்துப்பட்டியல் மற்றும் அவர்களுடைய ரகசியங்கள் சேகரிக்க புதிய திட்டம் இப்படிப்பட்ட செயல்களினால் மத்திய அரசின் மாநில அரசும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுமா!

(எல்பின்நிறுவனத்தின்  சகோதரர்களின் அறம்  தொலைக்காட்சியான அறம் தொலைக்காட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒளிபரப்பப் போவதாகவும் தங்களுடைய நாளிதழான மக்கள் ராஜியத்தில் செய்தி வெளியிட போவதாகவும் தகவல்கள் அவர்களுடைய வட்டாரத்தில் பரவி வருகின்றன அதனால்தான் தஞ்சை காவல் துறையும் எல்பின் சகோதரர்களின் ஆடியோ மிரட்டலுக்கு பணிந்து தாகவும் அவர்களுடைய எல்பின் குடும்பத்தினரிடையே கூறி வருவதாக தகவல் எது உண்மை என்ற உண்மையும் காவல்துறை தான் கண்டறிய வேண்டும்)


( சைபர் கிரைமில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எல்பின் நிறுவனத்துடன் யார் தொடர்புடைய அதிகாரிகள் என பட்டியல் மத்திய புலனாய்வுத்துறை தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை தூசி தட்டுமா)

திருச்சி மன்னார்புரம் அருகே தலைமை அலுவலகம் தமிழகம், பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்  )


இந்த நிறுவனத்தை பற்றி புதுக்கோட்டை சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அடுத்த வீடியோவில் கூறியிருப்பது -
சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்கள் காவல்துறைக்கு எதிராக புதிய குழு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் தங்களது நிறுவனத்தில் உள்ள ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து தற்போது இவர்களுக்கு எதிராக தஞ்சை, மதுரை மற்றும் பல மாவட்டங்களில் நேர்மையாக செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகளின் பின்னணி, குடும்ப நிலை, இவர்கள் எங்கே யாரிடம் லஞ்சம் வாங்கினார்கள் போன்ற தகவல்களை திரட்ட சொல்லி முன்னாள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளனர். இதன் மூலம் நல்ல நேர்மையான  அதிகாரிகளை மிரட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்.
இவர்கள் (Microfinance and entrance fees ) என கிராமப்புற மக்களை ஏமாற்றி தற்போது  பணம் சம்பாதிக்க முயற்சி எடுத்து உள்ளனர்  இன்ற தகவலை முன்பே கூறியுள்ளேன்.

இவர்கள் தொடர்ந்து காவல்துறையை மிரட்டுவதற்கு (ஓய்வுபெற்ற உயர் பதவி வகித்த காவல்துறை அதிகாரிகளை) உறுதுணையாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

தற்போது தபால் தலை வெளியிட போவதாக ஒரு தகவல் இவர்கள் சொல்லி உள்ளனர். இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. தலைமை தபால் நிலையத்தில் வெறும் 300 ரூபாய் மற்றும் போட்டோ கொடுத்தால் யார் வேண்டும் என்றாலும் தங்களுடைய புகைப்படத்துடன்  தபால் தலை வெளியிடலாம்.

காவல்துறையை மிரட்டிப் பார்க்கும் (சமீபத்தில் தஞ்சாவூர் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் செயலில் வாட்ஸ் அப்பில்  ஆடியோ வெளியிட்டார்கள் தற்போது மதுரை காவல் துறையை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்) இவர்கள் செயல் தொடர்ந்து செயல்படுமா? என தெரியாது.
நீதி ஒருநாள் வெல்லும்.

 பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது உண்மை.
ஜெய்ஹிந்த்.

இந்த தகவல்களை திரட்டி செய்தி வெளியிடும் சபரிநாதன் அவர்களை சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடாமல் தடுக்க கொலை முயற்சி செய்தும் பொய் வழக்கு போடுவதற்கு முயற்சி செய்தும் தோல்வியடைந்த நிலையில் பிரபல கட்சியின்  மாவட்டச் செயலாளரை  கையில் வைத்துக்கொண்டு  கட்சித் தலைமையை சபரிநாதன் ஆகிய என்னை செய்தி வெளியிடாமல் இருக்க பல வழிகளிலும் (எல்பின்)  அறம் மக்கள் நல சங்க தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ். ஆர். கே என்னும் ரமேஷ் குமார் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.