Sunday, May 03, 2020
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் !
சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் வழிபாடு தடை செய்யப்பட்டு உள்ளது நிலையில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இதே போன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. பூஜை நேரத்தில் கோவிலின் முக்கிய இராஜகோபுர கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அரசு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியூரிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சமயபுரத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து கோவிலின் மண்டபத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தியும் வருகின்றனர். வெளியூர்களில் இருந்து தினசரி 50 முதல் 100 நபர்கள் வரை மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மொட்டை அடிக்கும் மண்டபம் மூடியுள்ள நிலையில் முடிகாணிக்கை எங்கே செல்கிறது? வெளியூரிலிருந்து சர்வ சாதாரணமாக சமயபுரம் வந்து செல்லும் நிலையில் நோய்த்தொற்று சமயபுரம் பாகுதியில் பரவ வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர். கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் ஜி-கார்னர் மார்க்கெட் முடக்கப்படும்*
மொத்த வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் இன்றிரவு முதல், மொத்த வியாபாரிகள் அனைவரும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காய்கறி மொத்த விற்பனை சந்தையின் இயக்கமும் முடக்கப்படும்.
மொத்த வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் இன்றிரவு முதல், மொத்த வியாபாரிகள் அனைவரும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காய்கறி மொத்த விற்பனை சந்தையின் இயக்கமும் முடக்கப்படும்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில் இருந்து
போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்கள் கொரோனா தடுப்பு களத்திற்கு பணியாற்ற புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கான தயார் நிலையில் இருந்தவர்களுக்கு கொரோனா நடவடிக்கையால் பணிகள் வழங்கப்படவில்லை.
இருப்பினும் தற்போது கொரோனா ஊரடங்கு பணிக்கு காவலர்கள் தேவை இருப்பதால் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்கள் மட்டும் மணப்பாறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறை அருகே
கிராம மக்களுக்கு தன் சொந்த செலவில் 22 ஆயிரம் கிலோ அரிசி வழங்கிய தி.மு.க பெண் ஒன்றியக்குழு உறுப்பினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மரியபாக்கியராணி ஆரோக்கியசாமி. இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய 6 வது வார்டு தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் அவரது வார்டுக்குட்பட்ட 2200 பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் மொத்தம் 22 ஆயிரம் கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார். ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் சமூக இடைவெளியுடன் வந்து வாங்கிச் சென்றனர். இதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்றும் அரிசியை வழங்கினார். தன்னுடைய சொந்த செலவில் தி.மு.கவைச் சேர்ந்த பெண் ஒன்றியக்குழு உறுப்பினர் வழங்கிய இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் மணப்பாறை தேமுதிக மாவட்ட செயலாளர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதி 16 வார்டில் தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால் அவர்களது சொந்த நிதியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு நிவாரணமாக அரிசி மற்றும் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக வட்டச் செயலாளர் ராஜா மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன் மதுரைவீரன் மனோஜ் இமான் மதன் வெங்கடேஷ் ராஜாராம் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுக்குளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிவாரண பொருளைவழங்கினார்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுக்குளம் ஊராட்சியில்
கொரோனாவால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்திரவு பிறபிக்க பட்டு உள்ள இந்த சூழ்நிலையில் மாணவர்ளின் குடும்பங்களின் நலன் கருதி ஊராட்சியில் பல்வேறு நிவாரண உதவி வழங்கபட்டு வருகிறது அதன் தொடர்சியாக ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் 1வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 190 மாணவ மாணவியர்களுக்கு 5கிலோ அரிசி உப்பு மளிகை சாமன்கள் அடங்கிய பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் பிராகாஷ் ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி கலைவாணன் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் வழங்கபட்டது இந்த நிகழ்வில் துனை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் , ஊர் பொதுமக்கள் சமூக இடைவெளி காத்து கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவரின் இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
Thursday, April 30, 2020
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள அமர் ஜூவல்லரி சார்பில் இன்று ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியத்திடம் 5 லட்சத்துக்கான காசோலையை இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் திருச்சி ஆற்று காவேரி பாலத்தில் தினம்தோறும் ஏழை எளியவர்களுக்கு விடட்டோருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக இது நாட்களாக சுமார்
50 பேர்களுக்கு உணவு வழங்கி வந்த இடத்தில்
தற்போது சுமார் 300க்கு மேற்பட்டோர் வருகின்றனர்.
இது குறித்து பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அனைவருக்கும் உணவு வழங்கும் வகையில்
மாவட்ட நிர்வாகம் விடட்டோரை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்கபட்டு வருகிறது,
மேலும் அம்மா உணவகம் மூலமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது எனவே அதில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
நாடி ஜோதிடர் கூறுகையில் சென்ற ஆண்டு விகாரி வருடம் மார்கழி மாதம் 5-ஆம் தேதி சனிக்கிழமை ஆறு கிரகங்கள் ஒன்று சேர்ந்ததால் உலகத்தில் பலவிதமான தீய சக்திகள் உண்டாகும் போர் நடைபெறும் நிலையில் மதச் சண்டைகள் வலுவடையும் அதை தவிர்த்து இப்படி ஒரு வகையான புதிய வைரஸ் நோய் உண்டாகி வடக்கு வடமேற்கு நாட்டில் நோய் உண்டாகி ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து உள்ளது மேலும் 27. 3 .2020 குரு வக்கிரம் அடைந்த காலத்தில் தொட்டு நோய்த்தொற்று உச்சமாகி உயிரிழப்பு பொருள் இழப்பு பல பெரிய சோதனைகளும் மக்களை மக்களையும் மன்னர்களையும் வாட்டும் அது 8. 7. 2020 பிறகு முழுமையாக 90 சதவீதம் குறைந்துவிடும் மீண்டும் பழைய நிலையை அறிவார்கள் சராசரியான வாழ்க்கை மக்களுக்கு தொடரும்
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*முசிறி அருகே நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை காரில் அழைத்து சென்று விட்ட சமூகதொண்டு நிறுவனம்* .
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் கடலூர் மாவட்டத்திற்கு நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை சமூகஆர்வலர்கள் காரில் அழைத்து சென்று சொந்தஊரில் விட்டுவந்த சம்பவம் பொதமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
முசிறி அருகே உள்ள தா.பேட்டை வழியாக நாமக்கல் மாவட்டம், தூசூர் என்ற இடத்திலிருந்து 5 கூலித்தொழிலாளர்கள் கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு கிராமத்திற்கு நடந்துசென்றனர். 144 தடை உத்தரவு காரணமாக தொழிpல்பாதிப்படைந்து வறுமையில் வாடியதாலும், பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், தூசூரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவை நடந்துசெல்வதற்கு முடிவு எடுத்து 30 கிலோமீட்டர் நடந்துவந்த நிலையில் தா.பேட்டையை சேர்ந்த வாசவி தொண்டு நிறுவனத்தினருக்கு இதுகுறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து தா.பேட்டை போலீசாருடன் இணைந்து வாசவி தொண்டு நிறுவனத்தினர் தொழிலாளர்களுக்கு உணவு ,பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வாங்கிகொடுத்து கார் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...






