Sunday, May 31, 2020
On Sunday, May 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி முசிறி
சென்னையிலிருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு அறிகுறி
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மருதம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்னையிலிருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு அறிகுறி தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொட்டியம் தாலுகா, மருதம்பட்டியைச் சேர்ந்தவர் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து மருதம்பட்டிக்கு வந்துள்ளருக்கு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்று வந்ததில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அந்த நபரை உரிய பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுகாதார குழுவினர் அவர் வசித்த தெருக்களை சுத்தப்படுத்தி ,கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
Saturday, May 30, 2020
On Saturday, May 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 77 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக
சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று 30.05. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
On Saturday, May 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 30
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்
கூறுகையில்
தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி முக்கியமல்ல அவர்களுக்கு நிவாரணத் தொகை மட்டுமே முக்கியம். எனவே, மத்திய அரசு சார்பாக ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் அதே போல்
மாநில அரசு சார்பாக 7500ரூபாய் வழங்க வேண்டும். அதுதான் இப்போது தற்காலிக தீர்வு ஆகும் என்றார்.
மேலும்
நேரு செய்த சாதனைகளையும் காமராஜர் அவர்கள் செய்த சாதனைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது ஆனால் ஆறு ஆண்டுகளாக மோடி பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் என்று எதுவுமே இல்லை பணமதிப்பிழப்பு மக்கள் அவதிப்பட்டது தான் அவர் ஆட்சியில் கண்ட பலன்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணையை விரைவில் முடித்து அவர் இயற்கை மரணம் அடைந்தாரா கொலை செய்யப்பட்டாரா என்ன நடந்தது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் அத்துடன் ஜெயலலிதாவிற்காக தமிழகம் முழுக்க அவருக்கான சொத்து எவ்வளவு என்பது குறித்து தனியாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து வெளியிட வேண்டும் ஜெயலலிதாவின் சினிமா மூலம் வந்த வருமானத்தை வாரிசுதாரர்களுக்கும் மற்றும் அவர் ஆட்சியின் போது தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை நாட்டுடமையாக்க வேண்டும் என கூறினார்.
On Saturday, May 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 30
திருச்சி மாநகர திமுக செயற்குழு கூட்டம்
வருகிற ஜூன் 3ம்தேதி திமுகவின் மறைந்த முன்னாள் தலைவர்
மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் திருச்சி மாநகரில் கொரேனா பாதிப்பால் பல்வேறு நலத்திட்டங்களை நாம் இதுவரை வழங்கி வந்திருக்கிறோம். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் வெகு விமர்சையாக கொண்டாட விட்டாலும் எளியவர்களுக்கும் மூத்த முன்னோடிகளுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகளை நிவாரணப் பொருட்களை வழங்கி இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும். இது தான் நம் தலைவருக்கு செய்ய மரியாதை இருக்கும் என்று பேசினார் இக்கூட்டத்தில்
முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி கே.எம்.சேகரன் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், முத்துச்செல்வம், கண்ணன். இளங்கோ மோகன்தாஸ் மத்தியக் குழு பொறுப்பாளர்கள் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Friday, May 29, 2020
On Friday, May 29, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இருவரும் மற்றும் இவர்களின் சகோதரர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இவர்களின் கைவரிசையை காட்டி தற்போது திருச்சியில் எல்பின் என்னும் போலி நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை பற்றி நாம் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகிறோம் இதற்கு முன்னால் செய்தியில் இவர்கள் பல நூறு கோடி காசோலைகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.
காசோலை தேதி முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் வருமானம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நடுத்தர குடும்பத்தினர் தங்கள் தேவைக்காக முதலீடு செய்துள்ள தொகையை இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை திருப்பிக் கேட்க வரும்பொழுது தொகையை தர மறுத்து மேலும் எல்பின் நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்திகிறார்கள் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆனால் அவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் இவர்கள் அறிவித்தபடி உதாரணமாக ஒரு லட்சம் கட்டினால் மூன்று லட்சம் என்று அறிவித்துள்ளனர்.
அப்படி தொகையை கொடுக்காமல் அவர்கள் முதலீடு செய்த தொகையையும் திருப்பிக் கொடுக்காமல் இருக்க இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் எஸ் ஆர் கே ஆர் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆகிய இருவரும் அடியாட்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வருமானம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நடுத்தர குடும்பத்தினர் தங்கள் தேவைக்காக முதலீடு செய்துள்ள தொகையை இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை திருப்பிக் கேட்க வரும்பொழுது தொகையை தர மறுத்து மேலும் எல்பின் நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்திகிறார்கள் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆனால் அவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் இவர்கள் அறிவித்தபடி உதாரணமாக ஒரு லட்சம் கட்டினால் மூன்று லட்சம் என்று அறிவித்துள்ளனர்.
அப்படி தொகையை கொடுக்காமல் அவர்கள் முதலீடு செய்த தொகையையும் திருப்பிக் கொடுக்காமல் இருக்க இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் எஸ் ஆர் கே ஆர் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆகிய இருவரும் அடியாட்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வலுவான நபர்களாக இருந்தால் அவர்களின் தொகையை திருப்பி பெற்றுவிடுகிறார்கள் அப்படி இல்லாத ஒரு நிலையில் சமீபத்தில் திருப்பூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிறுவனத்தின் மீது தஞ்சையில் சமீபத்தில் வழக்குப் போடப்பட்டது .
மேலும் தஞ்சாவூரில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இவர்களிடம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று மனு அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்ச்சியாக தமிழகத்தில் மோசடியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படிப் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது
மேலும் தஞ்சாவூரில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இவர்களிடம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று மனு அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்ச்சியாக தமிழகத்தில் மோசடியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படிப் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது
On Friday, May 29, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி அருகே உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில் தாய் பசு இறந்ததால் கண்ணீர் விட்டு அழுத கன்றுக்குட்டியுடன் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் செல்வி ஏகநாதன் இவர் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் பசுங்கன்றுக்குட்டி வாங்கி வளர்த்து வந்த நிலையில் நாளடைவில் அது வளர்ந்து முதல் பருவத்தில் ஒரு காளை கன்றுக்குட்டியை ஈன்றது பின்னர் 2ம் பருவத்தில் சில நாட்களுக்கு முன் 2வதாக ஒரு பசுங்கன்றை ஈன்றது.
கடந்த 10 நாட்களாக தாய் பசு உடல் நலிவுற்ற நிலையில் இருந்ததால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தும் தாய்பசு தன் குட்டிக்கு தவறாமல் பால் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மாட்டுப் பட்டியில் நின்று கொண்டிருந்த பசு தீடீரென சரிந்து கீழே விழுந்துள்ளது. துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த பசுங்கன்று அதன் பின் கண்ணீர் விட்டு அழ தொடங்கியது.
பசுவை தன் பிள்ளையை போல் வளர்த்த மாட்டின் உரிமையாளர் செல்வி ஏகநாதன் பசு இறந்ததை பார்த்து கதறி அழுதார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரையும் கண் கலங்க வைத்தது.
On Friday, May 29, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மே29
திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு மற்றும் நிதியுதவியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் துவங்கியுள்ள அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி, காந்தி மார்க்கெட், பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மலைக்கோட்டை, பாலக்கரை, மற்றும் மாநகர பகுதியில் ஆட்டோக்களை இயக்கும் 1000 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
தொடர்ந்து ஆட்டோக்கள் இயங்க எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வகையில் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக, ஓட்டுனர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளி, உடல் மற்றும் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைச்சர் வெல்லமண்டி நடராஐன் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
On Friday, May 29, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி மே 29
தமிழகத்தில் கோவில்களை திறக்க இந்து மக்கள் கட்சி- சூடம் ஏற்றி கோரிக்கை
கொரோனா எனும் கொடூர அரக்கனை அழிக்க, தெய்வங்களால் மட்டுமே முடியும் என்பதால், கோவில்களை திறக்க வேண்டும்'
'மனிதர்களின் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பது, கோவில்கள் மட்டுமே. எனவே, அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். கோவில்கள் மூடப்பட்டிருப்பது, அவற்றை பராமரிக்கும் பூசாரிகளின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்துள்ளதால், அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்' மேலும்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழக அரசு, பக்தர்களின் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க வேண்டும்.
கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும் எனவே இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
என்பதை வலியுறுத்தி
மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம் ஜி தலைமையில்
மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோவில் முன்பாக கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
On Friday, May 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி தலைமைச் செயலரிடம் திமுக அளித்த மனுக்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம் என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கூறினார்.
ஊரடங்கால் பாதித்தவர்களின் குறைகளைக் கேட்பதற்காக திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்படாத மனுக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் திமுகவினர் வழங்கிவருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய கே.என். நேருபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட 22 ஆயிரத்து 500 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். அதை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா விவகாரத்தில் தொடக்கத்திலேயே உபகரணங்கள் வாங்குவது, மருத்துவமனையை தயார்செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் பிரச்னை அதிகமாகியிருக்காது.செய்தியாளர்களிடம் பேசும் கே.என். நேருதலைமைச் செயலரிடம் திமுக எம்.பி.க்கள் அளித்த மனுக்கள் அனைத்தும் பொய் என அமைச்சர் காமராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவை அனைத்தும் உண்மையான மனுக்கள் என நிரூபிக்கத் தயாராக உள்ளோம். கரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை. பல விவகாரங்களை அரசு மறைத்துவருகிறது" எனக் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...














