Monday, June 01, 2020

On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருப்பதாகக் கூறி, திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா நெடுஞ்சாலைத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது.

திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் நிறுவப்பட்ட பேரறிஞா் அண்ணாவின் உருவச் சிலையை கடந்த 1968- ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக அமைச்சா்கள் மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது

இதனால் ரவுண்டானாவின் அளவைக் குறைக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அண்ணா சிலை ரவுண்டாவை இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா். உள்ளேயிருந்த செடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் முடிந்த பின்னா், ரூ.40 லட்சம் செலவில் மிக குறுகிய அளவிலான ரவுண்டானா இதே பகுதியில் அமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

திருச்சி அண்ணா சிலை ரவுண்டானாவை இடித்து அகற்றியது போன்று, போக்குவரத்து நெரிசல்களுக்கும், விபத்துகளுக்கும் காரணமாக இருக்கும் நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரிஸ்டோ ரவுண்டானா போன்றவற்றையும் இடித்து அகற்றி, அங்கு குறுகிய அளவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
*தமிழக முதல்வர் அறிவிப்பின்படி திருச்சி *மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பொது பேருந்து போக்குவரத்து நாளை (ஜீன் 1- ம் தேதி ) துவங்குகியது*

*மக்கள் பயன்பாட்டிற்காக  இந்த பேருந்துகள்* *திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்*


  • *அரியலூர்*பெரம்பலூர்* *புதுக்கோட்டை* *ஆகிய 7 மாவட்டங்களை  *உள்ளடக்கியும்,


நாலாவது மண்டலத்துக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லை வரையிலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்படும்*

*திருச்சி மாவட்ட *பகுதிகளில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம் ) லிட் திருச்சி மண்டலம் மூலம் 50 சதவீத பேருந்துகளும்*

*60 சதவீத பயணிகளுடன்  180 நகர் பேருந்துகளும்  150 புறநகர் பேருந்துகள் என மொத்தம்  330 பேருந்துகள் இயக்கப்படும்*

*பேருந்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்*

*பேருந்தில் பின்படிக்கட்டில் ஏறும்போதும் ,முன்படிக்கட்டில் இறங்கும் போதும் நிச்சயமாக பயணிகள் சமூக இடைவெளியை பயன்படுத்திட* *வேண்டும்* போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இன்று முதல் பேருந்து இயக்கப்பட்டது
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
*பட்டியல் இன மக்களை அவதூறு பேசி வரும் திமுக எம்பி களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈபி ரோடு அம்பேத்கர் சிலை அருகே 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் தற்போது மாநகர மாவட்ட செயலாளர் குமார் ஆதரவு தெரிவித்தார்* 

திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என தலைமை கழகம் அறிவித்ததையடுத்து கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில்  திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


இதில் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து பதாகைகள் ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் சகாதேவன் பாண்டியன் அதிமுக பகுதி மற்றும்  வட்ட கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  அகில இந்திய மின்ஊழியர்களின் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிப்பதை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்கள் அனைத்து மின்வாரிய அலுவலகங்களின் முன்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின் துறையை தனியார் மயமாக்க கூடாது. 2020 மின்சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் தொழிலாளரின் உரிமையை பறிக்கக்கூடாது, மின் வாரியங்கள் பிரிக்கக் கூடாது, விவசாயம், குடிசை, நெசவு போன்றவைகளுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வரும் மானிய திட்டங்களை வழங்கி வரும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 1

திருச்சியில்
விவசாயிகள்
சங்கத்தினர் போராட்டம்.

தமிழக விவசாயிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பட்டத்திற்கு 
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள்  கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு 
உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி பாசன உரிமையில் தமிழகத்தை வஞ்சித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார செயல்பாட்டை முடக்கி மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும்
கீழமை ஆணையமாக
மாற்றி அவசர சட்டம் பிறப்பித்தது ரத்து செய்யும் வலியுறுத்தியும், மேலும் மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து தனியாரிடம் மின் திட்டங்களை ஒப்படைத்து மாநில உரிமைகளை பறிப்பது கைவிட்டு அச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.

பேட்டி :  சின்னதுரை
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து  36 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா  தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. 

 இதையடுத்து இன்று முதல் பேருந்துகள் இயக்க படலாம் என தமிழக அரசு  அனுமதி வழங்கியது. இதையடுத்து திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள  தமிழக அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 28 புறநகர் பேருந்துகளும் 8 நகரப் பேருந்துகளும்  இயக்கப்பட்டன. பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கையுறை மற்றும் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சனிடைசர்  வழங்கப்பட்டது. ஒவ்வொரு பேருந்தும் பேருந்து நிலையம் வரும் பொழுது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு இயக்கப்பட்டன. இன்று முதல் நாள் என்பதால் பயணிகள் குறைவாகவே காணப்பட்டனர். நாளடைவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும்  துறையூர் பகுதிகளில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    


பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ

 சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்தும் நிரூபர்            சபரிநாதனையும் கொலை செய்தே தீருவோம் எல்பின் நிறுவனர்கள் ஆவேசம்

 
சில நாட்களுக்கு முன்பு தஞ்சை காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக எல்பின் நிறுவனர் ராஜா என்கிற அழகர்சாமி ஆடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்

Sunday, May 31, 2020

On Sunday, May 31, 2020 by Tamilnewstv in    
  •  திருச்சி கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டாஸ்மார்க் கடையில் திருட்டு 357360 ரூபாய் திருடபட்டுள்ளதாக கூறப்படுகிறது 



 திருச்சி மாநகரம் கோட்டை காவல் சரகம் கரூர் சாலையில் உள்ள தாஜ் கல்யாண மண்டபம் எதிரில் உள்ள அரசு மதுபான கடை எண் 10304 இன்று காலை 9.45 மணி அளவில் அதன் சூப்பர்வைசர் முருகன் வயது 50 தந்தை பெயர் சண்முகம் 3வது குறுக்கு தெரு சீனிவாச நகர் வயலூர் ரோடு திருச்சி என்பவரும் விற்பனையாளர்கள் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் திறக்க வரும்பொழுது ஏற்கனவே கடையின் முன்புறம் உள்ள ஷட்டர் இன் 20 இல்லாமலும் உட்புறம் இருந்த கம்பியினால் ஆன கேட்டும் திறக்கப்பட்டு இருந்துள்ளது மேற்படி நபர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது முதல் நாள் வசூல் ஆன ரூபாய் 3 லட்சத்து 54 ஆயிரம் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.

 உடனடியாக கோட்டை காவல் நிலைய குற்றப் பிரிவுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர் கடையில் இருந்த முன்புற 3 பூட்டுகளும்  காணாமல் போயுள்ளது காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

  மேலும் சில நாட்களுக்கு முன்பு உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மார்க் கடையில் திருட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது

On Sunday, May 31, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு மற்றும் நிதியுதவியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கி வருகிறார்.


கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

அதன் ஒரு பகுதியாக
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு இலவச உணவு வழங்கினார்

கங்காரு கருணை இல்லத்தினை பார்வையிட்டார்.உடன் சாய் கோகுலம் தொண்டு நிறுவனம் சார்பாக 300 பொட்டலங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

 அமைச்சரிடம் கருணை இல்ல பயனாளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை *மருத்துவ வசதிகள்,*
கட்டணமின்றி தகனம் செய்ய மின்மயான அனுமதி மற்றும்
திருச்சிராப்பள்ளி சாலையோரங்களில் இருந்து மீட்கப்படும் நபர்கள் (1000 பேர் வரை தங்க வைக்கும்)

பராமரிப்பு கட்டிடம் கட்டுவதற்கான அரசுக்கு சொந்தமான நிலம் வேண்டும் என்ற கோரிக்கை மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது

 முதியோர் இல்ல பயனாளிகள் சார்பாக கொடுக்கப்பட்டது.கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உறுதி அளித்துள்ளார்

இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.