Tuesday, June 16, 2020
On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக நாடு தழுவிய கண்டன நாள் என்ற தலைப்பில் மாநில மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம்
மத்திய_மாநில_அரசுகளே!கொரோனாவால்_பாதிக்கப்பட்ட_மக்களுக்கு_நிவாரணம்_வழங்கக் கோரி அகில_இந்திய_அளவிலான #ஆர்ப்பாட்டம்_ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M) சார்பில் திருவெறும்பூர்_காந்தி நகர், செல்வபுரம் கிளை_சார்பில்_செல்வபுரம் ரேசன் கடை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் தஸ்தகீர் தலைமையில்
பா.லெனின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் தவுலத் பாண்டியன், ராதா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடி அரசே!
எடப்பாடி அரசே
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,
குடும்பத்துக்கு ரூ7500/- மாதா மாதம் நிவாரணம் வழங்கு,
100நாள் வேலையை200 நாட்களாக உயர்த்தி 256/- தினக்கூலியை கொடு.
வங்கி_தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனக்கான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்.
முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே,
நகர்புற வேலையில்லாதோர்களுக்கு நிவாரணம் வழங்கு வேண்டி
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருச்சி மாநகரில் 70 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
Monday, June 15, 2020
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்
அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 2014 வரை சிங்கப்பூரில் பணி செய்து வந்ததாகும் பணியின் போது நடந்த விபத்தினால் கிடைத்த இழப்பீடு தொகையாக 48 லட்சம் ரூபாயை சிங்கப்பூர் அரசு அவருக்கு நஷ்ட ஈடாக கொடுத்ததை கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 13.11.2019 ஆம் ஆண்டு முதல் 5.12.2019 வரை மொத்தம் 45 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 90 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர் இந்த காசோலையை பெறுவதற்கு இவர்கள் இரண்டு மாதங்கள் ராஜ்குமாரை படைத்துள்ளனர் பின்பு 48 நாட்கள் கழித்து பின் தேதியிட்ட மேற்படி காசோலையை கொடுத்துள்ளனர்.
இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என ராஜ்குமார் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பால்ராஜ் என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலா கால்டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்தவரின் கோடீஸ்வரரான ரகசியம் தங்கிய வாடகை ரூம் வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் மானத்திற்கு அஞ்சி தூக்கில் தொங்கி விடுவதாக ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டு இருந்த நபரின் கோடீஸ்வரரான ரகசியம் பல 100 கோடி கொள்ளை அடித்தது எப்படி பல ஆதாரங்களுடன்
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 15
திருச்சி ஜி கார்னரில் செயல்பட்டு வரும் காய்கறி வியாபாரிகள் தங்கள் கடைகளை மீண்டும் காந்தி மார்கெட்டிற்கு மாற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர்
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 7ஆம் தேதி திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் காந்தி மார்க்கெட் அனைத்து காய்கறி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜுலு இக்கூட்டத்தில் அவருடன் 50க்கு மேற்பட்டோர்கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இதனை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களை சந்தித்து முறையிட கடந்த வாரம் அவர் சென்னை சென்று வந்தார் இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி தேவர் ஹாலில் வியாபாரிகளும் கொரோனா பரிசோதனை அரசு மருத்துவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட பி.ஆர்.சி எனப்படும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டார்.
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 15
வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம்
அழைத்து வர வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இணையவழி போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் திரும்பி அழைத்து வர வலியுறுத்தி வலியுறுத்தி
மாநில பேச்சாளர் ரஹமத்துல்லா தலைமையில்
இணையவழி
போராட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஹமத்துல்லா கூறியதாவது
கொரனா வைரஸ் காரணமாக ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும் அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் இந்த இணைய வழி போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினார்.
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது
கடந்த 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன் எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் முறையே 14 மற்றும் 16 பெட்டிகள் உள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.
மற்ற பெட்டிகள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணிகள் முகக் கவசம் அணியவும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியுடன் அமரவும் அறிவுறுத்தப்படும் நிலையில் பெரும்பாலானோர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை முதல் திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு - திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு - திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக செல்லும் இயங்கி வருகிறது.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேரும், பின்னர் திருச்சியில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
இந்நிலையில், நாளை முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி சென்று வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. அதிகாலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேர்ந்தது.
மேலணைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவியும், விதை நெல்களை தூவியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பூஜைகள் செய்து காவிரியை வழிபட்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை முழுவதுமாக காவிரியில் திறந்து அனுப்பினர்.
திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
தண்ணீர் இருந்தால் தாளடியும் சேர்த்து மூன்று போகங்கள் சாகுபடி செய்யும் சூழல் இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது.
குறுவை பயிருக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் 2011இல் ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் 3.4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் குறுவை பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால், நிலத்தடி நீராதாரங்களை கொண்டு ஒரு லட்சம் ஏக்கர் வரை மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் தேவை. இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலேயே தொடர்ந்து வந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேட்டூருக்கு நேரில் வந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்தார். விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாமக்கல், கரூர் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தது.
கரூர் மாயனூர் கதவணைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்ததால், முக்கொம்புக்கு திங்கள்கிழமை காலை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டைவாய்த்தலைக்கே காலையில்தான் வந்து சேர்ந்தது. மணல் அள்ளியதால் மேடு, பள்ளங்கள் அதிகம் இருந்ததால் அவற்றை நிரப்பியபடி வந்து செல்ல தாமதமானது. பின்னர், தாமதமாக முக்கொம்பு மேலணைக்கு பிற்பகலில் வந்தது.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனர். இதேபோல பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு காவிரி தண்ணீரை வரவேற்றனர்.
பின்னர் முக்கொம்பு அணையில் உள்ள மதகுகள் வழியாக கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திங்கள்கிழமை இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
முக்கொம்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது .
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட 20 ஊராட்சிகளை சேர்ந்த 200 தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிவாரண உதவியை அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் வழங்கினார். துணைத்தலைவர் வனிதா சத்தியசீலன், அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகளாக அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, உணவு ஆகியவை வழங்கப்பட்டது.
Sunday, June 14, 2020
On Sunday, June 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*சொத்து தகராறில் தென்னை மரங்களை வெட்டி கடத்திய விஹெச்பி மாநில பொருளாளருக்கு போலீஸ் வலை*
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் என்.ஆர்.என். பாண்டியன் (76) விசுவஹிந்து பரிசத்தின் மாநில பொருளாளராக உள்ளார். இவருக்கும் இவரது உறவினரான தியாகராஜன் (61) என்பவருக்குமிடையே சொத்துதகறாறு இருந்துவந்த நிலையில் தியாகராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநிலையில் பாண்டியன் கடந்த 9 ம்தேதி சம்பந்தப்பட்ட விவசாய தோட்டத்தில் தோப்பில் இருந்த 80 தென்னை மரங்களை 20 பணி ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தியாகராஜன் துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர். முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்று பிற்பகல் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாண்டியனை கைது செய்யசென்றபோது அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரது காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துவந்த போலீசார் பாண்டியனை தேடி வருகின்றனர்.
On Sunday, June 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
விராலிமலை அருகே குடும்பத்தகறாறில் கிணற்றில் குத்தித்த இளம்பெண் உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள தேங்காய்திண்ணிப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி மதுமதி (19). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆளான மதுமதி அவர்களது தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றினுள் குதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இருப்பினும் பலத்த காயமடைந்த நிலையில் கிணற்றில் இருந்து கூக்குரல் எழுப்பிய மதுமதியை மீட்க தீயணைப்புதுறையினருக்காக காத்திராமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிணற்றினுள் இறங்கி கயிற்றுக்கட்டில் மூலம் கயிறு கட்டி மதுமதியை கிணற்றில் இருந்து மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...