Tuesday, June 26, 2018

On Tuesday, June 26, 2018 by Tamilnewstv in ,    
ஆதித்தமிழர் பேரவை சார்பாக அமைச்சர் பொன்.ராதா பேசியதற்கு கண்டனம்

திருச்சி: அருந்ததி மைந்தன் வீரவணக்க நாளான கோட்டை ஸ்டேஷன் அம்பேத்கர் நகரில் நினைவு கிளையை நிறுவனத் தலைவர் அதியமான் திறந்து, கொடியை ஏற்றினார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில்:

ஆதித்தமிழர் பேரவை தோழர்களையெல்லாம் பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தேச பக்தர்களாக என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார் அவரை இப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவித்தனர்.


மேலும், தலைவர் தலைவர் ராசாத்தி அம்மாள், வடக்கு மாவட்ட செயலாளர் வீரமுருகன் ,மாநில துணைப் பொதுச் செயலாளர் செங்குயிலி, மாநில செயலாளர் பொறியாளர் பேரவை எழில் புத்தன் ,மாநில துணை செயலாளர் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை மற்றும் மாநில, மாவட்ட , நகர ,ஒன்றிய நிர்வாகிகள் ,தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்
On Tuesday, June 26, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை  மறியல் போராட்டம் நடைபெற்றது ஒரு பகுதியாக திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் சரவணன் தலைமை வகித்தார் முருகானந்தம் மாநில துணைச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் ஜெய்கணேஷ் மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் மாநிலத் துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் மாநிலத் துணைச் செயலாளர் முன்வைத்தனர் இந்த போராட்டம் மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிவகுமார் சிறப்புரையாற்றினார் குப்புசாமி சீனுவாசன் பாலன் ராமச்சந்திரன் பழனிவேலு முனுசாமி தேவேந்திரன் ஜெயச்சந்திர ராஜா நெடுஞ்செழியன் ராஜாமணி சுப்ரமணியன் விஜயகுமார் வீரப்பன் சிவகுமார் பூபதி லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் ஜவர்கலால் நேரு நன்றி உரை ஆற்றினார்
மாநில துணைத் தலைவர் சரவணன் கூறுகையில் சமூக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் டாஸ்மாக் பணியாளர்களின் நிர்வாகத்தில் தலையிட ஒப்பந்ததாரர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் மதுபான கடையில் மது கூடமும் ஒரே இடத்தில் இயங்கும் வண்ணம் மாற்றி அமைத்திட வேண்டும் அனுமதியின்றி மது கூடங்களை இயங்குவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் 5 லட்சமாக உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு 30 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த சாலைமறியல் நடைபெறுவதாக தெரிவித்தார்
பேட்டி மாநில துணைத் தலைவர் சரவணன்
On Tuesday, June 26, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி               

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி இணைந்து நடத்திய சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி,மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ்,ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள் மேலும் திருச்சி மரக்கடை காந்தி மார்க்கெட் ஆய்வாளர் செந்தில்குமார் போக்குவரத்து ஆய்வாளர் முகம்மது ரஃபி ஆகியோர்ஏ ற்பாட்டில் சையது முத்தரச பள்ளியிலிருந்து பாலக்கரை வழியாக காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் சுற்றி சையத் முத்துராசா பள்ளியில் முடிவடைந்தது

இவ்விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது : 

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ம் தேதி உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  போதைப்பொருள் உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். போதைப்பொருள் உட்கொள்வதால் மனிதன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் தான் பொதுமக்களிடையே போதைப்பொருள்கள் உட்கொள்வதால் வரக்கூடிய தீங்குகளை விளக்க வேண்டும்.  உலகம் முழுவதும் விபத்து மற்றும் பல்வேறு நோய்கள் மூலம் இறப்பதைவிட போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.  புகையிலை பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அபராதம் விதிக்கப்படும்.  பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் தங்களின் வீடுகளில் போதைப்பொருள் தீங்கு பற்றி விளக்க வேண்டும்.  பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் சுற்றி 100 மீட்டர் அல்லது 300 அடி சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.  போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுமக்களிடையே பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

இந்தியாவில் தமிழகத்தை போதைப்பொருள் இல்லை என்ற மாநிலமாக மாற்ற நாம் முயற்சிக்க  வேண்டும்.  திருச்சி மாவட்ட மக்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தக் கூடாது.  குறிப்பாக போதைப்பொருளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அறவே ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் ஸ்ரீமத் ஆண்டவன், ஸ்ரீமதி இந்திரா காந்தி, புனித வளனார் கலை அறிவியல், குறிஞ்சி கலை அறிவியல், ஹோலி கிராஸ் கலை அறிவியல்,காவேரி கலை அறிவியல்,ஜமால் முகம்மது, பெரியார் நர்சிங், ஜென்னீஸ் நர்சிங், இந்திரா கணேசன், கிறிஸ்துராஜ் கலை அறிவியல் ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 2000-ம் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பதாகை ஏந்தியும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர்.   

இப்பேரணியானது வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம்,ஸ்டேட் பேங்க் வழியாக திருச்சி ரெயில் சந்திப்பு நிலையத்தில் நிறைவடைந்தது

மேலும்,இவ்விழிப்புணர்வு பேரணியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் என்.எஸ்.நிஷா உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) கபிலன், கி.ஆ.பெ.அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா, இந்தியன் ரெட்கிராஸ் சேர்மேன் திரு ராஜசேகரன், இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி செயலர் திரு ஜவஹர் ஹசன் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் தன்னார்வலர்கள் செவிலியர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, June 26, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி பத்தாண்டுகளுக்கு மேலாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்தவரை போலி மருத்துவரை கைது -  சுகாதார துறை இணை இயக்குனர் நடவடிக்கை.


திருச்சி உறைய10ர் ராமலிங்க நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக முனாஃப் என்பவர் அக்கு பஞ்சர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் போலியாக மருத்துவம் பார்ப்பதாக திருச்சி மாவட்ட சுகாதார துறைக்கு புகார் ஒன்று சென்றுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அவர் சிகிச்சை பார்த்து வந்த இடத்திற்கு சென்ற திருச்சி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஷம்சாத் பேகம்மற்றும் சித்த மருத்துவர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி அவருடைய சான்றிதழ்களை கேட்டு பெற்றுள்ளனர். அவர் சான்றிதழின் நகலை மட்டும் தந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் ஷம்சாத் பேகம் புகார் அளித்ததன் அடிப்படையில்  உறைய10ர் காவல்துறையினர் முனாஃபை கைது செய்து உறையூர் காவல்நிலையத்திற்க்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் சிகிச்சை அளிக்க பயன்படுத்தி வந்த இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

தொடர்ந்து முனாஃப் அளித்த சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆராயப்படும் அவர் 1500ரூபாய் பணத்தை தனியார் நிறுவனத்தில் போலி சான்றிதழ் வாங்கி மருத்துவம் பார்த்து வந்ததாகவும்ää இதுகுறித்து புகார் அளித்தீன்பேரின் அவர்மீது நடவடிக்கை எடுக்கபட்டதாக என ஷம்சாத் பேகம் தெரிவித்தார். 

பேட்டி : ஷம்சாத் பேகம் இணை இயக்குனர்-திருச்சி மாவட்ட சுகாதார துறை

Thursday, June 14, 2018

On Thursday, June 14, 2018 by Tamilnewstv in    
திருச்சி மாநகர பெண் காவலர்கள் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது


திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் திருச்சி துறையூர் சௌடாம்பிகா கல்விக்குழுமம் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளி மாநகரில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் துவங்கியது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது
இந்த முகாம் துவக்க விழாவில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் மருத்துவர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ரேவதி பற்றிய விளக்க உரை ஆற்றினார் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் அமல்ராஜ் அவர்கள் திருச்சி விசாரம் கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் மருத்துவர் விநாயகம் அவர்கள் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் மருத்துவர் ராமமூர்த்தி திருச்சி மற்றும் ராமாபுரம் விசாலம் குழுமத்தின் தலைவர் மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சட்டம் ஒழுங்கு திருமதி நிஷா மயில்வாகனன் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்

Wednesday, June 13, 2018

On Wednesday, June 13, 2018 by Tamilnewstv   
திருச்சி வண்ணாரப்பேட்டையில் குடியிருக்கும் முருகையன் மகன் நாகராஜன் என்பவர் திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நவீன ஆள் பிடிக்கும் உத்தியையும் அதில் சிக்காமல் தப்பிக்க நினைப்பவரை எப்படிஎல்லாம் மிரட்டுகின்றனர் என்பதையும் தோலுரித்துக்காட்டியுள்ளது.

நாகராஜன் ஜூன் மாதம் 9 ந்தேதி திருச்சி வாசன் கண் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கே கண் சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது ஒரு கூப்பனை கொடுத்துள்ளனர். அதில் திருச்சி தில்லைநகர் முதல் கிராசில் உள்ள வாசன் டென்டல் கேர் பல் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

விளக்கை நோக்கி நகரும் விட்டிலாய் நாகராஜனும் அங்கே போயுள்ளார். பதிவு கட்டணம் இல்லாமல் அவரிப் பரிசோதித்த மறுத்தவர் சிவகாமி, பல் கட்ட வேண்டுமா என்று கேட்டுள்ளார். ஆம் என்று சொன்னதும் மேலே ஒரு பல் கீழே ஒரு பல் இரண்டும் கட்ட ஒரு லட்சம் ஆகும் என்று சொல்லியுள்ளார் மருத்துவர். அதன் பின்னர் எக்ஸ் ரே எடுக்க நூற்றைம்பது ரூபாய் கட்டச் சொல்லியுள்ளனர். அந்த எக்ஸ்ரே பிலிமை கேட்டபோது சிகிச்சை எடுக்கும்போது தருவார்கள் என்று சொல்லியுள்ளனர்.

அடுத்து இந்த வைத்தியத்துக்கான எஸ்டிமேட் தருகிறோம் என்று சொல்லி கம்ப்யூட்டரில் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அதில் வாசன் டென்டல் கேர் என்று லோகோவும் முகவரியும் இருக்கும் தலைப்புப் பகுதியை ஸ்கேல் வைத்து கிழித்து விட்டு வெறும் எஸ்டிமேட்டை மட்டும் கொடுத்துள்ளனர். அதை ஏன் கிழித்து விட்டு கொடுக்கிறீர்கள் நான் உங்களிடம் சிகிச்சைக்கு வந்ததற்கு தடயமே இல்லாமல் கொடுக்கிறிர்களே என்று கேட்டதற்கு இது கார்ப்பரேட் மருத்துவமனை இங்கு இப்படிதான் செய்வார்கள் என்று சொல்லியுள்ளனர். தர்க்கம் அதிகமானபோது மேலாளர்தான் அப்படி கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியிருக்கிறார்கள். மேலாளரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னதும் அங்கே வந்த கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் யோவ் இது கார்ப்பரேட் ஆஸ்பிடல் இங்கே இப்படித்தான் தருவோம். நீ இன்னும் ட்ரீட்மெண்டே எடுக்கலை. முன்னாடியே ஒரு லட்சம் கட்டுன்னா கட்டுவியா ஒரு தடவை சொன்னா புரியாது நீ என்ன காட்டுப்பயலா என்று கேட்டபடி நாக்கைத் துருத்திக் கொண்டு அடிக்க வந்துள்ளார். பிறகு எக்ஸ்ரே எடுத்ததற்கு மட்டும் பில்லையும் எஸ்டிமேட்டையும்  கொடுத்து அனுப்பியுள்ளனர்.

கண் சிகிச்சைக்குப் போய் இலவசக் கூப்பனுக்கு ஆசைப்பட்டு பல் மருத்துவமனைக்குப் போய் 2 பல் கட்ட ஒரு லட்சம் கேட்டது மட்டுமல்லாமல் 2 பல்லுக்கு இவ்வளவா அதுவும் தலைப்பில்லாத எஸ்டிமேட்டா என்று கேட்டதுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி   உடனே காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் அப்போது  திங்கள்கிழமை மருத்துவமனை ஆட்களை வரச் சொல்கிறோம் விசாரணைக்கு வாருங்கள் என்று சொல்லியுள்ளனர். தற்போது நடவடிக்கை எடுக்கக் கோரி நான் காவல்துறையிடம் மனு அளித்தோம் என் காவல்துறை அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது மேலும் பொதுமக்கள் யாரும் கார்ப்ரேட் மருத்துவமனை என்று ஏமாறக்கூடாது என்பது நோக்கத்தில் நான் மனு அளித்துள்ளேன் என்று கூறினார் நாகராஜன்

Friday, June 08, 2018

On Friday, June 08, 2018 by Tamilnewstv   
திருச்சி முறையற்று செயல்பட்ட கிருஷ்ணா ஸ்கேன்  செய்யும் ஸ்கேன் சென்டர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரையின் பேரில் குருநாதன் தமிழ்நாடு பிரதிநிதி சீர் முறை ஆணையம் அவர்கள் மற்றும் இணை இயக்குனர் மருத்துவர் ஷம்ஷத் பேகம் தலைமையில் நடத்திய ஆய்வுகளில் முறையற்ற ஆவணங்கள் இல்லாமலும் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்துள்ளது தெரிந்தது அதனடிப்படையில் அவர்கள் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்


அப்போது இணை இயக்குனர் மருத்துவர் சம்பத் பேகம் கூறுகையில் இன்றைக்கு மட்டும்  45 நோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு ள்ளது அதில் 18 பேர் கர்ப்பிணி பெண்கள் மூன்று மாத காலங்களாக முறையான ஆவணங்கள் பராமரிப்பு இல்லாமலும் ஸ்கேன் சென்டர் ரினிவல் செய்வதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் செயல்பட்டு வந்தது அதில் கடந்த சனிக்கிழமை நாங்கள் ஆய்வு செய்த ஆய்வின் போது ஸ்கேன் சென்டரில் முறையாக லைசன்ஸ் வாங்கும்போது இருந்த மருத்துவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளனர்



ஆனால் ஸ்கேன் சென்டரில் நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாமல் அவ்வப்போது மருத்துவர்களை அழைத்து ஸ்கேன் செய்துள்ளனர் ஸ்கேன் அப்படி ஸ்கேன் செய்யும்போது form 6 நிரப்பப்படவில்லை இந்த ஸ்கேன் சென்டருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் மறுப்பும் தெரிவிக்கவில்லை மேலும் ஸ்கேன் சென்டர் முறையற்ற நடத்தி வந்தனர் பொதுநலன் கருதி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம் சட்டப்படி ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்ந இந்நிகழ்வின்போது திருச்சி தில்லை நகர் காவல் சரகத்திற்குட்பட்ட என்பதால் காவல்துறை துணை ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்


பேட்டி மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சம்சாத் பேகம்

Tuesday, June 05, 2018

On Tuesday, June 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி       5.6.18

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி                      



ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும்.

திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணியினை மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் இராசாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்தது.

விவசாயம், நீர் மேலாண்மை, மீன் பிடி தொழில் போன்றவற்றில் செயற்கை முறைகளை தவிர்ப்பது, ஆற்றல் தேவைகளுக்கான மாற்று வழிகளை கண்டறிவது மட்டுமே வருங்காலத்தில் சுற்றுபுறத்தை பாதுகாக்க வழிவகுக்கும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிமனிதர்களின் தாக்கம் அதிகம் என்பதால், பள்ளி பருவத்திலேயே இதுகுறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், பேரணியில் தலைமை வனப்பாதுகாவலர் யோகேஷ் சிங் IFS, மாவட்ட வன அலுவலர் சுஜாதா, உதவி வனப்பாதுகாவலர் சம்பத் குமார், முதன்மை கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் ரில்டன், மருத்துவ கல்லூரி முதல்வர் அனிதா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tuesday, May 29, 2018

On Tuesday, May 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் தமிழகமெங்கும் கடையடைப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக திருச்சி லால்குடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 காலமுறை ஊதியம் சமூகப்பாதுகாப்பு உடனடியாக பெற்றிட தொகுப்பு உதயம் எனும் கொத்தடிமை விளங்கிட தீவிர செயல்பாடுகள் கொண்ட இடைத்தரகர்கள் ஒலித்திட சுயநல வேட்கை கொண்ட மாவட்ட மேலாளர் பணியாளர் விரோதப்போக்கை தகர்த்திட மதுக்கூட ஒப்பந்ததாரர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் வன்முறைத் தாக்குதலை முறியடித்த உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் ஜவகர்லால் நேரு மாவட்ட தலைவர் பெருமாள் மாவட்ட அமைப்பு செயலாளர் முன்னிலை வகித்தனர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் முருகானந்தம் மாநில துணைச் செயலாளர் சிறப்புரையாற்றினார் ராஜா பூபதி சுப்பிரமணியம் கடல் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பிச்சைமுத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றி உரையாற்றினார்


பேட்டி..... முருகானந்தம் மாநில துணைச் செயலாளர்