Wednesday, January 13, 2021
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர்
திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர் அவரது தாலியை மறந்து சென்ற நிலையில் சமயபுரம் போலீஸார் தாலி மற்றும் தங்க செயின் என 23 பவுன் நகையினை மீட்டு பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சைலஜா. இவர் அங்கு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு குடும்பத்துடன் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பெங்களூரு சென்றுள்ளார். சேலம் அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது தனது கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க சங்கிலி என 23 பவுன் நகைகளை காணாது திடுக்கிட்டார். இது குறித்து தொலைபேசி மூலம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
சமயபுரத்தில் அவர் எங்கெங்கு சென்றார் என்று கேட்டறிந்த போலீசார், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனை நடத்தினர். அப்போது அவரின் 20 பவுன் தாலி செயின், மற்றுமொரு 3 பவுன் தங்க சங்கிலியும் அங்கிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அவர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு வந்த உடன், கவுன்சிலர் சைலஜாவின் நகைகள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சமயபுரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் ,23 பவுன் நகையை பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
சமயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸாரின் துரித நடவடிக்கையினை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சின்னாள் மனைவி காத்தாம்மாள் (வயது 40). இவரது மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையொட்டி த...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...


0 comments:
Post a Comment