Monday, August 26, 2024
திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா குளிர் அரங்கில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியானது யுகேஜி, எல்.கே.ஜி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் பிரிவில் கேம்பியன் பள்ளி யுவின் விராஜ் முதலிடமும், அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளி பூஜா ஸ்ரீ இரண்டாம் இடமும், ராஜாஜி வித்யாலயா பள்ளி இனியன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
பறவைகள் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் பிரிவில் கேந்திர வித்யாலயா பள்ளி பிருத்திகா முதலிடமும், சந்தானம் வித்யாலயா பள்ளி பிரதன்யா இரண்டாம் இடமும், மகாத்மா காந்தி வித்யாலயா பள்ளி தீக்ஷிதா மூன்றாம் இடமும் பெற்றனர்.
பிறந்த தின விழா கேக் வரைந்து வண்ணம் தீட்டும் பிரிவில் ஆர்.எஸ்.கே பள்ளி லிங்கேஸ்வரர் முதலிடமும், கமலா நிகேதன் பள்ளி தியா கார்த்தி இரண்டாம் இடமும், ஆர்ச்சர்டு பள்ளி மணிஷ் கார்த்திக் மூன்றாம் இடமும் பெற்றனர்
உணவு பாதுகாப்பு குறித்து படம் வரைந்து வண்ணம் தீட்டும் பிரிவில் தூய ஆண்டனி மேல்நிலைப்பள்ளி ஆண்டனி மரியா சூசை முதலிடமும், எஸ்ஆர்வி சீனியர் செகண்டரி பள்ளி ஜனாலினி இரண்டாம் இடமும், காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி சஞ்சிதா மூன்றாம் இடமும் பெற்றனர்.
சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்
தலைப்பில் நடைபெற்ற
3 நாட்கள் ஓவிய கண்காட்சியில்
33 இளம் ஓவியர்கள்
பங்கேற்று இந்திய அரசியலமைப்பு சட்டங்களை தூரிகை ஓவியத்தில் உயர் பண மதிப்பிழப்பு சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்பு சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம். கையால் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுவது தடைச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலன் சட்டம் என பல்வேறு தலைப்புகளில்
133 ஓவியங்களை காட்சிப்படுத்தினர்.
ஒவிய கண்காட்சியினை மேனாள் நீதி அரசர் கே. சந்துரு துவங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி எம்.மகாலட்சுமி,
ஓவியர் என் எஸ். மனோகர் ஒவியங்கள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
பரிசளிப்பு விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார் இயக்குனர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார்
ஓவியப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஒவிய கண்காட்சியில் பங்கேற்ற இளம் ஓவியர்களுக்கும், ஓவியக்கலை பயின்ற ஓவியர்களுக்கும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சான்றிதழும் பரிசுகளையும் வழங்குகினார்.
கவிஞர் நந்தலாலா,
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோர்
வாழ்த்துரைவழங்கினர்.
முன்னதாக பொற்கொடி வரவேற்க, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையா ஷேக் முகமது
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் கட்சி நிர்வாகிகள் பகுதிச் செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...


0 comments:
Post a Comment