Monday, August 25, 2014
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்கு காலை 7 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் காலை 10 மணியில் இருந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர்.என். கிட்டு சாமி, செல்வகுமார சின்னையன் எம்.பி., மாநில விதை நேர்த்திக்குழு உறுப்பினர் புதூர் கலைமணி, கொடுமுடி பேரூராட்சி தலைவர் சரவணன், திருப்பணி கமிட்டி தலைவர் டாக்டர் நடராஜன், பேரூராட்சி துணை தலைவர் மனோகரன் பொயதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். வரிசையாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.
முன்னதாக அமைச்சர் தங்கமணிக்கு கோவில் சார்பாக செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்...
-
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
0 comments:
Post a Comment