Saturday, August 30, 2014
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில செல்போன் கடைகளில், கம்ப்யூட்டரில் இருந்து மெமரிகார்டுகளில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வதாகவும். சில சிடி கடைகளில் ஆபாச படம் மற் றும் புதுப்பட சிடி விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ராஜாமில் ரோடு, பெருமாள் செட்டி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் கடைகள் மற்றும் சி.டி. கடை களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில் ஒரு சில கடைகளில் கம்ப்யூட்டரில் இருந்து செல்போன்களுக் கான மெமரிகார்டுகளில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்தும், ஆபாச படங்கள் அடங்கிய சி.டி. க்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதில், ராஜாமில்ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் மெமரிகார்டில் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்த நோதாஜி ரோட்டை சேர்ந்த சரவணக்குமார் (29) என்பவரையும், பெருமாள்செட்டி வீதியில் உள்ள செல்போன் கடையில் கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த இந்திராநகரை சேர்ந்த செந்தில்குமார்(38) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆபாச படம் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்திய இரண்டு கம்ப்யூட்டர் மற்றும் மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் பெருமாள்செட்டி வீதியில் உள்ள இரண்டு சிடி கடைகளில் சோதனை செய்தபோது அங்கு 41 ஆபாசபட சிடிக்கள் மற்றும் சமீபத்தில் வெளி யான ஆஞ்சான், முண்டாசு பட்டி, அரிமாநம்பி, வேலை யில்லா பட்டதாரி உள்பட உரிமம் இல்லாத புதுப்பட சிடிக்கள் 97ஐ பறிமுதல் செய்தனர். ஆபாசபடம் மற்றும் புதுப்பட சிடிக்களை விற்பனைக்கு வைத்திருந்த குமரன்நகரை சேர்ந்த அபுபக்கர்(25) இந்திராநகரை சேர்ந்த ரபீக்(40) ஆகியோரை கைது செய்தனர். கிழக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட இமமாம்கான் வீதியில் உள்ள ஒரு சிடிக்கடையில் சோத னை செய்தபோது, ஆபாச சிடி உள்பட மொத்தம் 28 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை விற்பனை செய்ய வைத்திருந்த மரப்பேட்டையை சேர்ந்த ராமராஜ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...

0 comments:
Post a Comment