Saturday, August 30, 2014
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார். கோவை கணபதி பகுதியில் வசிப்பதால் இவருக்கு கணபதி ராஜ்குமார் என பெயர் வந்தது. கணபதி நல்லதண்ணீர் தோட்டம் பகுதியில் தனது வீட்டருகே குமாரசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற ஆங்கிலவழி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமயந்தி இப்பள்ளியை கவனித்து வருகிறார். எம்.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார். தற்போது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
1995ல் மாணவர் அணி மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர், தொண்டாமுத்தூர் பகுதி செயலாளர் ஆனார். 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இத்தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலர் ஆனார். தொடர்ந்து, 2006, 2011 என அடுத்தடுத்து மூன்று முறை ஒரே வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தற்போது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக உள்ளார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி கடந்த ஜூன் மாதம் நீக்கப்பட்ட பிறகு, இவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதல்முறையாக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
0 comments:
Post a Comment