Sunday, February 25, 2018

On Sunday, February 25, 2018 by Tamilnewstv   
திருச்சி      25.2.18

இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி  என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு

2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.

இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.

பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி

0 comments: