Monday, February 05, 2018

On Monday, February 05, 2018 by Tamilnewstv   
திருச்சி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திராடவிடர் கழகம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக  மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி  மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: