Monday, October 27, 2014
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றின் துணை ஓடைகளான சங்கிலி பள்ளம் மற்றும் ஜம்மனை பள்ளம் ஓடைகளில் காலை 6 மணி முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஓடை அருகில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை புகுந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி, மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டன. திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வருவாய் துறை அதிகாரிகளுடன் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை பள்ளம் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையாளர் மா.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் தட்டான் தோட்டம், டை யமண்ட் தியேட்டர், சந்தைப் பேட்டை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மழை வெள்ளம் வீடுகளுக்குள் மேலும் புகாதவாறு ஓடைகளில் அடைப்புகளை நீக்கவும் உத்தரவிட்டனர். மேலும் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கே.வி.ஆர் நகர் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர மேயர் அ.விசாலாட்சி உத்தரவிட்டார்.
இது குறித்து திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் சங்கிலி பள்ளம், மற்றும் ஜம்மனை பள்ளம் ஓடைகளில் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே தூர்வாரி நீரோட்டம் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஓடைகளில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள போதும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் தாழ்வான சில பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து விடும் என்பதால் அதிகாலை 4 மணி முதல் மக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காங்கயம்புதூர் பள்ளி, கே.ஜி.கல்யாண மண்டபம், செல்லப்பபுரம் பள்ளி, எச்.எம்.எஸ்.மஹால், செம்மேடு, கருப்பகவுண்டம்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் 3069 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக் கு காலையில் இட்லி மதியம் சாப்பாடு, தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்ப்ட்டுள்ளவர்களுக்கும், ஓடைகளின் கரையில் வசிப்பவர்களுக்கும் மழைக்கால நோய்தடுப்பு சிகிச்சை மற்றும் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மழை நீர் அதிகம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் 11 ஜே.சி.,பி. இயந்திரங்கள் மூலம் வடிகால்கள் அமைத்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுவது தடுக்கப்பட்டு வருகிறது. குப்பைகள் அள்ளுவது, சாக்கடை அடைப்புகளை நீக்குவது, வெள்ளம் புகுந்த வீடுகள், வீதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு தெளிப்பது போன்ற சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும் தேவையான அளவு அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு எந்த ஒரு அவசர நிலையிலும் மக்களுக்கு உதவ மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. பொதுமக்கள் மழை வர துவங்கிய உடனேயே தாழ்வான பகுதிகளை விட்டு, அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளிகளில் வந்து தங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் எம்.ரவி,உதவி பொறியாளர் தமிழ்செல்வன், உதவி ஆணையாளர்கள், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சென்று இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment