Sunday, February 08, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in ,    

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது.
ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: சாதிக்கும் சிந்தனை வேண்டும். அறிவுப் பசி அனைவருக்கும் அவசியம். எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. குறிக்கோள், லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அடைய 10 ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும். சாகும்வரை படித்து கொண்டு இருக்க வேண்டும். வெற்றியின் ரகசியம் வாசிப்பது தான். பாட புத்தகங்கள் தவிர தினம் 100 பக்கம் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவருக்குள் ஏராளமான திறமைகள் உள்ளன. அதை வெளிக் கொண்டு வர வேண்டும். வாழ்வில் வெற்றி, தோல்வி வரும். தோல்விகள் அதிகம் வரும். அதற்காக மனம் தளரக்கூடாது. அது அனுபவங்களை கொடுப்பதுடன், திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.தியாகராஜர் கல்லுாரி செயலாளர் உமா கண்ணன், தியாகராஜர் மில் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், முதல்வர் அபய்குமார், டீன் வாசுதேவன், பதிவாளர் பழனிநாதராஜா மற்றும் பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

0 comments: