Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்தனர். இவர்கள் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்தோணிசாமி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 5 மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் காப்பாற்றி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகையும் 9 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர். அவர்களை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நேற்று 9 மீனவர்களும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 30–ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைத்தனர்.

0 comments: