Saturday, March 03, 2018

On Saturday, March 03, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 3.3.18
திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்
திருச்சி திருவாணைக்காவல் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இது குறித்து தெரிவித்தது திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திறற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டிருந்தது அதன்படி இப்பாலம் பணிகள் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது.இப்பால பணி சென்னை திருச்சி கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும்  இணைக்கும் சாலையாக  உள்ளது
இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம்மக்கள் தொகை கொண்ட திருவரங்கம்ääதிருவாணைக்காவல் மற்றும் லால்குடி புள்ளம்பாடிääதிம்மராய சமுத்திரம் மேலூர் திருச்சி மாநகரம் மற்றும் கரூர்ää குளித்தலை நகரத்துடன் இணைக்கும்.தற்போது திருவானைக்காவல் பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
இப்பால வேலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284 மீட்டரும் 17.20 அகலமும் பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76 மீட்டரும் பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச்சாலை )ஆகும் 
இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது பாலத்தின் மீதம் உள்ள பணிகளை முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு முடிபெரும் தறுவாயில் உள்ளது என்றும் அதனால் சென்னை- திருச்சி திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் திருவானைக்காவல் மேம்பாலம் ரூ47.3கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணி முடிந்தவுடன் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

0 comments: