Sunday, May 06, 2018

On Sunday, May 06, 2018 by Tamilnewstv   
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்


முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு, கல்லீரல், குடல், இரைப்பை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் Dr.இராஜரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.

இருதய நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு - கார்டியாக் கேத் லேப்-னை மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.முகாமில் இலவச இசிஜி, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இம் மருத்துவமனையில் கல்லீரல், இருதயம், சிறுநீரகம் செயழிலந்த நோயாளிகளுக்கு மிக குறைந்த செலவில் கல்லீரல், இருதயம் , சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகிறது மற்றும் ECMO சிகிச்சை இங்கே தான் உள்ளது தெரிவித்தார்.

மேலும், இம் முகாமில் Dr. ரியாஸ், Dr.மணி வேலன், Dr. மகாலெட்சுமி, Dr.ராஜ்கண்ணா மற்றும் பத்மநாபன், லோகேஸ், மோகன்ராஜ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள்.

0 comments: