Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாணவர்களுக்கான போட்டி நடக்கிறது. நாளை மாணவிகளுக்கான போட்டி நடைபெறுகிறது.
மதுரை பி.பீ.குளத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கபடி போட்டி நடை பெற்றது. இதனை மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்து பேசியதாவது:–
தமிழகத்தில் முதல்– அமைச்சர் அம்மா பல்வேறு திட்டங்களை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவ–மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக விளையாட்டு துறையையும் ஊக்கப்படுத்தி வருகிறார். விளையாட்டில் ஆர்வம் காட்டும் மாணவ– மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ– மாணவிகளுக்கு முதல்– அமைச்சர் அம்மா ரொக்கப் பரிசு மற்றும் விருதுகள் வழங்கி வருகிறார்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 312 மாணவர்கள் இன்று நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் பரிசு வழங்கப்படும்.
விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் தங்கள் திறமையை ஒழுக்கத்துடன் கடைபிடித்து சாதனை படைக்க வேண்டும். தற்போது உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் தனி ஒதுக்கீடு உள்ளது. எனவே மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகள் தங்கள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டும்.
உயர் கல்விக்கு செல்லும் போது விளையாட்டு பிரிவில் ஒதுக்கப்படும் மாணவ–மாணவிகளில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ–மாணவிகள் அதிக பேர் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் கதிரவன், மாநகராட்சி கல்வி அதிகாரி மேரி, கல்விக்குழு தலைவர் சுகந்தி அசோக், சுகாதார குழு தலைவர் முனியாண்டி, அ.திமு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரமேஷ், நிலையூர் முருகன், பாசறை பகுதி செயலாளர் டால்பின் அசோக், அமெச்சூர் கபடி நிர்வாகிகள் அகஸ்டின், செல்லூர் வல்லரசு, மாநகராட்சி செய்தி–மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் மற்றும் ஆசிரிய, ஆரியைகள் கலந்து கொண்டனர்.