Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது மேலூர் அருகே உள்ள வல்லடிகாரர் கோவிலுக்குள் சென்று தேர்தல் விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக மு.க.அழகிரி, பி.எம்.மன்னன், தற்போதைய மேலூர் ஒன்றிய செயலாளர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அப்போதைய தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தாரையும், வீடியோ எடுத்தவரையும் தாக்கியதாகவும், அதில் காயமடைந்த தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் தொடர்ந்த வழக்கின் விசாரணை மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று மேலூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பாக அவரது வக்கீல் மோகன்குமார் மற்றும் எழிலரசன் உட்பட வக்கீல்கள் ஆஜராகினர். விசாரணை நடத்திய கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி விசாரணையை அடுத்த மாதம் 18–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.