Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
குழந்தையில்லாத தம்பதியருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது .இதில்  மகப்பேறின்மை மருத்துவ நிபுணர்கள் தலைமையில் பரிசோதனை நடத்தப்படும் முகாமில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன் ஆகியவற்றில் 50 சதவீத சிறப்புச் சலுகை வழங்கப்படும். மேற்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கட்டணச் சலுகையும் உண்டு. ஆண்களுக்கு தனி மருத்துவரால் ஆலோசனை வழங்கப்படும். நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள், திருமணமாகி ஓராண்டுக்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், சிகிச்சை எடுத்து பாதியில் விட்டவர்களும், இந்த முகாமில் பங்கேற்கலாம்.இதில் பங்கேற்பவர்கள் ஏற்கெனவே சிகிச்சை எடுத்திருப்பின், அனைத்து வகையான பரிசோதனை விவரங்களையும் கொண்டு வரவேண்டும். மேலும், 0452-4263000, 2543000, ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.