Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    


திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி வார்டுகளில் அமைக்கப்பட இருக்கும் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது.இந்த வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் குறித்து கருத்துரை ஏதும் தெரிவிக்க விரும்புகிற பொதுமக்கள் வருகிற 12–ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.இந்த தகவலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார்

0 comments: