Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    


திருப்பூர் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம், பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் பாதித்த நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அவர்களின் தன்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் புகைப்படத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 22, 23 ஆகியவற்றில் இயங்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

0 comments: