Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

மருமகளிடம் இருந்து மகனை பிரித்து வைத்த குற்றத்துக்காக பெண்ணுக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.பனியன் நிறுவன தொழிலாளி

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் நஞ்சம்மாள்(வயது 55). இவருடைய மகன் விஜயகுமார்(31). பனியன் நிறுவன தொழிலாளி. விஜயகுமாரும், திருநீலகண்டபுரம் எஸ்.வி.காலனியை சேர்ந்த ரெமிதாவும்(29) காதலித்து கடந்த 21–9–2011 அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் 2 மாதம் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.ஆனால் நஞ்சம்மாள், தனது மருமகளான ரெமிதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 23–12–2012 அன்று வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற விஜயகுமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மேலும் விஜயகுமார் தனது செல்போனில் இருந்து ரெமிதாவுக்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) அனுப்பினார். அதில் ரெமிதாவை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.5 நாள் சிறை தண்டனை

இதைத்தொடர்ந்து ரெமிதா திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மாமியாரின் தூண்டுதலின் பேரில் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், இதற்கு காரணமான தனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மகளிர் போலீசார், நஞ்சம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1–ல் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்லத்துரை, பெண்ணுக்கு கொடுமை செய்த குற்றத்துக்காக நஞ்சம்மாளுக்கு 5 நாள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

0 comments: