Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Tamilnewstv in
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு...
திருச்சி மாநகர் - 203,
திருச்சி புறநகர்( மாவட்டம்) - 972 .

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகமாகும். ( 127 சிலைகள் அதிகம்) .. கடந்த வருடத்தில் திருச்சி மாநகரில் 175 சிலைகளும், புறநகரில் 873 சிலைகளுமாக ஆக மொத்தம் 1048 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தற்போது இந்த வருடம் திருச்சி  மாநகரில் 203 இடங்களிலும், புறநகரில் 972 இடங்களிலும் அதாவது மொத்தம் 1175 சிலைகள் வைக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிலைகள் அனைத்தும் வெவ்வேறு தினங்களில் அதற்கென ஒதுக்கப் பட்ட இடங்களில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது... திருச்சி மாநகரத்தில் வருகிற 7 ஆம் தேதி மாலையும், திருச்சி மாவட்டம்  துவரங்குறிச்சியில் இன்று ( 05.09.2016) மாலையும், புத்தாநத்தத்திலும்  இலங்காக்குறிச்சியிலும்  07.09.2016 அன்றும், கொளக்குடியில் 11.09.2016 அன்றும் சிலைகள் கரைக்கப்படும் தினங்கள் எனத் தெரிவிக்கப் பட்டது அதன் படி திருச்சி காவிரி பாலத்தில் விநாயகர் சிலைகள் தீயணைப்பு துறையினரால் தண்ணீர் அடிக்கப்பட்டு பின்னர் காவிரியில் கரைக்கப்பட்டன