Sunday, February 08, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in ,    
imggalleryஅனைத்து சூழலிலும் வாழப் பழகவேண்டும் என, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் பணியாளர் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யு.சி. டேவிதார் அறிவுறுத்தினார்.
டோக் பெருமாட்டி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இளநிலை, முதுநிலை மற்றும் எம்.ஃபில் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
கல்லூரி காலங்கள் முடிந்ததும் அடுத்து என்ன செய்வது, எந்த நிறுவனத்தில் பணியில் சேருவது போன்ற பல கேள்விகள் உங்கள் முன் இருக்கலாம். அதனால், எந்த ஒரு அவசரமும் இல்லாமல் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை தெளிவாகத் தேர்ந்தெடுங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து வாழவேண்டும். தவறு செய்துவிட்டோம் என பின்னாள்களில் வருந்த வேண்டாம். வாழ்க்கை என்றும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள் உண்டு. அதைப் பின்பற்றினால் நீங்கள் தீர்மானித்த பாதையில் உங்கள் வாழ்க்கை பயணிக்கும்.
செய்யும் வேலையை திருப்தியுடனும், முழு ஈடுபாடுடனும் செய்யுங்கள். அதுவே, உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதேபோல், வாழ்க்கையின் எல்லா தருணங்களும் உங்களுக்கு ஏற்றதாகவே அமையாது. அனைத்து சூழலிலும் வாழ பழகுங்குள். உங்கள் ஆளுமைத் திறனையும், வாழ்வின் உணர்ச்சிகளையும் ஒன்றாக குழப்ப வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட கடவுளின் மேல் நம்பிக்கையாய் இருங்கள். அது உங்களை என்றுமே நல்வழிப்படுத்தும் என்றார்.
விழாவில், இளநிலை மாணவிகள் 691 பேரும், முதுநிலை மாணவிகள் 167 பேரும், ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் 78 பேரும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் பி.டபிள்யு.சி. டேவிதார் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில், கல்லூரி முதல்வர் மெர்சி புஷ்பலதா மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

0 comments: