Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by Unknown in ,    
கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி மேலும் 15 வழக்குகள்: கலெக்டர் தாக்கல் செய்தார்மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா 2 வழக்குகளும், தற்போதைய கலெக்டர் சுப்பிரமணியன் 116 வழக்குகளும் மேலூர் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் கோர்ட்டில் மேலும் 15 வழக்குகளை மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியிடம் தாக்கல் செய்தார். அதில், மதுரை கிழக்கு தாலுகா பகுதிகளான பேராக்கூர், சிவலிங்கம், இடையபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும், மேலூர் தாலுகாவில் திருவாதவூர், இ.மலம்பட்டி, கீழவளவு, செம்மனிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் மொத்தம் 15 இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 60,652 கன மீட்டர் அளவுள்ள 1,059 கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுக்களை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாக்களில் அனுமதியின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி வேண்டி இதுவரை மொத்தம் 133 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பி.ஆர்.பி. கிரானைட் மீது மட்டும் 92 வழக்குகளும், பிற நிறுவனங்களின் மீது 41 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அப்போது, அரசு தரப்பு வக்கீல்கள் ஷீலா, ஞானகிரி, கனிமவளத் துறை மாவட்ட துணை இயக்குனர் ஆறுமுக நயினார், மேலூர் தாசில்தார் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்

0 comments: