Thursday, September 11, 2014
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும்.
வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை, புதுத்தோட்டம், அக்காமலை, மானாம்பள்ளி, குரங்குமுடி, சின்னக்கல்லார், நீரார் ஆகிய வனப்பகுதிகளில் சுமார் 150 இந்த வகை குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஆனை மலை புலிகள் காப்பகத்தில் 500 குரங்குகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுத்தோட்டம் எஸ்டேட் மற்றும் அதனைச்சுற்றியுள்ள வனப் பகுதியில் மட்டும் 75–க் கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் வாழ்ந்து வரும் குரங்குகள் வால்பாறை– பொள்ளாச்சி மெயின்ரோடு பகுதியில் இருக்கும் புதுத்தோட்டம் எஸ்டேட் ரோடு ஓர பகுதிகள், பி.ஏ.பி. காலனி குடியிருப்பு பகுதி, காமராஜ் நகர் பகுதி, துளசிங் நகர் பகுதி, மற்றும் வால்பாறை டவுன் பகுதிகளிலும் சுற்றித் திரிந்து வருகின்றன.
இந்த சிங்கவால் குரங்குகள் புதுத்தோட்டம் பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற பின் வீடுகளின் ஓடுகளை உடைத்தும் வீட்டு கூரைகளில் இருக்கும் இடைவெளிக்குள் புகுந்தும் வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது.
அவ்வாறு வீடுகளுக்குள் செல்லும் குரங்குகள் வீட்டிலிருக்கும் சாப்பாடு அரிசி, பருப்பு தக்காளி மற்றும் திண்பண்டங்களை எடுத்து சாப்பிடுவதோடு வீட்டிலிருக்கும் பொருட்களையும் உடைத்தெறிந்து விடுகின்றன. இதனால் புதுத்தோட்டம் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு பொருட் செலவுகளும் ஏற்பட்டு வருகிறது.
நேற்று காலை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் வேலைக்கு சென்றிருந்த தனபால் என்பவரின் வீட்டுக்குள் கண்ணாடி ஓட்டை உடைத்து உள்ளே புகுந்த சிங்கவால் குரங்குகள் சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்திவிட்டு வீட்டின் உள் அறையிலிருந்த துணி, தலையணைகள், கம்பளி ஆகிய அனைத்தையும் கிழித் தெறிந்தது.
அருகில் இருந்தவர்கள் தனபால் வீட்டாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் உடைந்து வீடு முழுவதும் சிதறிக்கிடப்பதை பார்த்து இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குரங்குகளை விரட்டி விட்டனர்.
ஆனால் குரங்குகள் தொடர்ந்து அருகில் இருக்கும் வீடுகளுக்குள்ளும் நுழைந்து புதுத்தோட்டம் குடியிருப்பு பகுதியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.எனவே எஸ்டேட் நிர்வாகமும் வனத்துறையினரும் சிங்கவால் குரங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...

0 comments:
Post a Comment