Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15–ந் தேதி கோவை வருகிறார். கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் அவர் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு கருதி வ.உ.சி. மைதானம் இப்போதே போலீசின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.

0 comments: