Thursday, April 23, 2015

On Thursday, April 23, 2015 by Tamilnewstv in    

திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டாக்டர்.ராமகிருஷ்ணன் மற்றும் செல்வராஜ் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டனர்.
அரசு தடைசெய்த கார்பைடு கல் வைத்து மாங்காய் பழுக்க வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் பக்க விலைவில்லாத அதிகாரிகளின் பரிந்துரைப்படி எத்தினால் எனும் திரவத்தை தெளிப்பதன் முலம் மாங்காய் பழுக்க வைக்கலாம் என்றும் அதனால் எந்த வித பக்க விளைவுகள் எற்பாடாது என்பதை அதிகாரிகளின் விளக்கவுரை பின் பக்கவிளைவுகள் இல்லாத இந்த முறையின் படி பழுக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முஹம்மத் பாரூக் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் செயலாளர் பாலசுப்பிரமணியன் துணைசெயலாளர் சரவணன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: