Thursday, April 23, 2015

On Thursday, April 23, 2015 by Unknown in ,    













திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி மற்றும் பணிகள் தொடக்க நிகச்சி  திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர்  திரு .ச .பிரசன்ன இராமசாமி அவர்கள் .தலைமையில் இன்று 22/.04/.2015. நடைபெற்றது . இவ்விழாவில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு .எம் .எஸ் .எம் ஆனந்தன் .அவர்கள் கலந்து கொண்டு ரூ .55.12.லட்சம் மதிப்பிலான 7 முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்தார் . மேலும் ரூ .-68-50.லட்சம்  மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி  வைத்தார் .  திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சி செம்மாண்டம்பாளையத்தில்  ரூ .24, லட்சம் மதிப்பீட்டில்  கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் . பல்லடம் ஊராட்சி ஒன்றியம்  ஆருமுத்தாம்பாளையம் ஊராட்சியில்  ரூ .1.லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்க பட்ட 30.ஆயிரம்  லிட்டர் ,கொள்ளளவு  கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி .ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட  30.ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி . சேகம்பாளையத்தில் ரூ.5.45 லட்சம் மதிப்பீட்டில் 1.லட்சம் லிட்டர் கொள்ளளவு  கொண்ட குடிநீர்  கீழ்நிலை நீர்தேக்க தொட்டி .கணபதிபாளையம் .ஊராட்சியில்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ .10.87 லட்சம் மதிப்பில்  கட்டிமுடிக்கப்பட்ட 20000 லிட்டர் கொள்ளளவு  கொண்ட மேல்நிலை  நீர்தேக்க தொட்டி .பல்லடம் நகராட்சி 13 வது  வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதி  ரூ .4.50 லட்சம்  மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை  ஆகிய மொத்தம் .ரூ . 55.12 லட்சம் மதிப்பிலான 7முடிவுற்ற வளர்ச்சித்திட்ட  பணிகளை  மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு .எம் எஸ் .எம் .ஆனந்தன் .அவர்கள் திறந்து வைத்தார் .  திருப்பூர் ஊராட்சி  ஒன்றியம் மங்களம் ஊராட்சியில்  பல்லடம்  மங்கலம்  சாலை  முதல்  அமிர்தா பள்ளி வரை  ரூ .30.லட்சம்  மதிப்பீட்டில்  தார் சாலை  அமைக்கும் பனி .இடுவாய் ஊராட்சியில் ரூ .12 லட்சம் மதிப்பில்  புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பனி . இடுவாய் ஊராட்சியில்  ரூ .3 லட்சம் மதிப்பில்  கீழ்நிலை  குடிநீர்த்தொட்டி  கட்டும் பனி . பல்லடம் ஒன்றியம்  கரைப்புதூர்  ஊராட்சி  அருள்புரத்தில்  சட்டமன்ற  தொகுதி  மேம்பாட்டு நிதி ரூ .6.50 லட்சம் மதிப்பில் புதிய  அங்கன்வாடி மையம் கட்டும் பனி . கணபதிபாளையம்  ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை   கட்டும் பனி என  மொத்தம் .ரூ .68.50 லட்சம் மதிப்பீட்டில்  5 வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு .எம் .எஸ் எம் .ஆனந்தன் அவர்கள் .கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர்  திரு .கே .பி .பரமசிவம் ,மாவட்ட ஊராட்சி தலைவர் திரு .எம் .சண்முகம் .திட்ட இயக்குநர்  மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திரு .ரூபன் சங்கர்ராஜ்  ,திருப்பூர் ஒன்டியக்குழு தலைவர் திரு .சாமிநாதன் ,பல்லடம் ஒன்றியகுழு தலைவர் திரு .எம் .கே .ஆறுமுகம் . மாவட்ட வழங்கல் அலுவலர் திரு .செல்வம் , துணை பதிவாளர் பொது விநியோகத்திட்டம்  திரு .எஸ் .சண்முகவேல் .,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு .பிரபாகரன் திரு ,பால்ராஜ் ,திருமதி .சந்திரிகா ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் திருமதி கற்பகம் ,பல்லடம் நகராட்சி  உறுப்பினர் திருமதி .சித்ரா தேவி முதலிபாளையம் ஊராட்சி தலைவர்  திருமதி .லட்சுமி செல்வராஜ் ,கரைப்புதூர் ஊராட்சித்தலைவர் திரு .நடராஜ் ஆகியோர் உட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் 

0 comments: