Thursday, October 30, 2014

On Thursday, October 30, 2014 by Unknown in ,    
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்'                                                                                                                                         கரூர் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் சேகர் என்ற கரடிசேகர், 52. கடந்த, 2005ம் ஆண்டு ஜூன், 4ம் தேதி, வெள்ளியணை சின்னமநாய்க்கன்பட்டியில் சாராயம் விற்பனை செய்ததாக, வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்தாஸ், சேகரை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு, கரூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, இன்ஸ்பெக்டர் மோகன்தாஸுக்கு, சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத மோகன்தாஸுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி முகமது ஷியாவுதின் உத்தரவிட்டார். இதே போல், திண்டுக்கல் மாவட்டம், லட்சுமணப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 48, கார் டிரைவர். கடந்த, 2011ம் ஆண்டு ஃபிப்ரவரி, 17ம் தேதி, கரூர்- மதுரை சாலையில், அரவக்குறிச்சி அருகே, காரில் சென்ற போது, மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்தனர். விபத்து குறித்து அரவக்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அனந்தபத்மநாபன், வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபனுக்கு, பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி முகமது ஷியாவுதின் உத்தரவிட்டார்.

0 comments: