Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by farook press in ,    



திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் காலேஜ் பஜார்  கண்காட்சி துவக்க விழா நடந்தது. கல்லூரி தலைவரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.கல்லூரி முதல்வர் நேச்ரல் நான்சி பிலிப், கூட்டுறவு சங்க தலைவர் வசந்தி,செயலாளர் முத்துரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் கல்லூரி மாணவிகள் கடைகள் வைத்து பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்களை காட்சிக்கு வைத்து இருந்தார்கள். மொத்தம் மாணவிகளின் சார்பில் 32 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.இதில் பெண்களுக்கான பேன்சி பொருட்கள், ஹேன்ட் பேக், காலணிகள், அலங்கார பொருட்கள், கைத்தறி ஆடைகள், பாஸ்ட் புட் வகைகள், பான்பூரி, கட்லட் போன்ற உணவு பொருட்களை தயார் செய்து கண்காட்சியில் வைத்து இருந்தனர்.முடிவில் வணிகவியல் துறை தலைவர் புனிதாநன்றி கூறினார்.

0 comments: