Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜினீயரிங் மாணவர் கொலை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சங்கர்(வயது 22). இவருடைய மனைவி கவுசல்யா(19). இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டனர். கடந்த மார்ச் மாதம் 13–ந் தேதி உடுமலையில் சங்கரையும், கவுசல்யாவையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது.இதில் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் தாய்மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை கைதுசெய்தனர். இதில் 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.28–ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்த கொலை வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி(பொறுப்பு) எம்.கே.ஜமுனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு சுதா முன்னிலையில் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனால் மாஜிஸ்திரேட்டு சுதாவுக்கு இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மாஜிஸ்திரேட்டு நேற்று சாட்சியம் அளிக்க வரவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 28–ந்தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது

0 comments: