Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

கோவையில் வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் கோவையில் வெள்ளிக்கிழமை பரவலாக வன்முறை வெடித்தது 


கோவை ரயில் நிலையம், கலைக்கல்லூரி சாலை, டவுன்ஹால், உக்கடம், கெம்பட்டி காலனி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம் சாலை, ரத்தின புரி, காந்திபுரம் உட்பட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதனால், பேருந்துகள் ஓடவில்லை.

நகரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் என கண்டறியப்பட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆற்றுப்பாலம் சுங்கச் சாவடி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களாவர். இன்னும் பலர் கைதாகலாம் என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

4 மாவட்டங்களில் கடையடைப்பு

சசிக்குமார் படுகொலையைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழ்மை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஓட வில்லை. மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.முழு விவரம்: |கோவையில் போலீஸ் வாகனத்துக்கு தீ; பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் மக்கள்|

6 தனிப்படைகள் அமைப்பு:

இதற்கிடையில், கொலையாளிகளை கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தெரிவித்துள்ளார்.

சசிக்குமார் கொலை குறித்து உளவுப் பிரிவு, "சசிக்குமாரை கொன்றது 4 பேர் கொண்ட கும்பல். மொபட்டில் சசிக்குமார் அன்றாடம் செல்வதை கண்காணித்தே கொலையை நடத்தியுள்ளனர். இருப்பினும், சசிக்குமாரின் செல்போன் அழைப்பு மற்றும் வாட்ஸ் அப் போன்ற விஷயங்களையும் சேகரித்து வேறு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சசிக்குமாரின் முதுகு, கழுத்து, கை என பல பகுதிகளில் 11 வெட்டு விழுந்துள்ளன" என்றனர்.

சகோதரர் சொன்ன தகவல்:

கொலையான சசிக்குமாரின் தம்பியும், கோவை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவருமான சுதாகர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘எங்கள் அண்ணன் சசிக்குமாருக்கு கேரளாவில் உள்ள ஒரு அமைப்பின் லெட்டர் பேடில் சில ஆண்டுகளுக்கு முன்பே மிரட்டல் கடிதம் வந்தது. அதையடுத்து அண்ணணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட் டது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை அவருக்கு ஒரு போலீஸ் துணையாகவே இருந்தார். அதை ஒரு வாரம் முன்பு தான் விலக்கினார்கள்" என்றார்


0 comments: