Wednesday, January 13, 2021

On Wednesday, January 13, 2021 by Tamilnewstv   

 சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர்


திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர் அவரது தாலியை மறந்து சென்ற நிலையில் சமயபுரம் போலீஸார் தாலி மற்றும் தங்க செயின் என 23 பவுன் நகையினை மீட்டு பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.


கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சைலஜா. இவர் அங்கு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்  குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு குடும்பத்துடன் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பெங்களூரு சென்றுள்ளார். சேலம் அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது தனது கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க சங்கிலி என 23 பவுன் நகைகளை  காணாது திடுக்கிட்டார். இது குறித்து தொலைபேசி மூலம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். 

 சமயபுரத்தில் அவர் எங்கெங்கு சென்றார் என்று கேட்டறிந்த போலீசார், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனை நடத்தினர். அப்போது அவரின் 20 பவுன் தாலி செயின், மற்றுமொரு 3 பவுன் தங்க சங்கிலியும் அங்கிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அவர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு வந்த உடன், கவுன்சிலர் சைலஜாவின் நகைகள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சமயபுரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் ,23 பவுன் நகையை பெண் கவுன்சிலரிடம்  ஒப்படைத்தனர்.

சமயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸாரின் துரித நடவடிக்கையினை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்

0 comments: