Wednesday, January 13, 2021
திருச்சி தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது.
இதற்காக தமிழ்நாட்டிற்கு வந்த கொரோனா தடுப்பூசி திருச்சி சென்றடைந்தது. அதன்பின்னர்,கொரோனாதடுப்பூசி திருச்சி சுகாதார மண்டலத்திற்கு உள்பட்ட திருச்சி தஞ்சை, திருவாரூர் நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதல்கட்டமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் ஆறு லட்சம் பேருக்கு வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செலுத்துவதற்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. ஒத்திகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தயார் நிலையில் அரசு உள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினமும் 100 பேருக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முன்கள பணியாளர்கள் முடிந்த பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்படும்.
தடுப்பு ஊசி ஒரு நபருக்கு இரண்டு (டோஸ்) முறை செலுத்த வேண்டும். முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகு அடுத்தகொரோனாதடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம்கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 42 நாள்களுக்குப் பின்னரே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அனைத்து பரிசோதனைகளையும் முடித்த பின்னரே தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முன்கள பணியாளர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முடியும்.
இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. அவசியம் ஏற்பட்டால் மக்களின் அச்சத்தைப் போக்க நான் தடுப்பூசி செலுத்தி கொள்வேன். தடுப்பூசி செலுத்திய பின்னர் 30 நிமிடங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து இருக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பல தனியார் மருத்துவமனைகள் முன்வந்து பதிவு செசெய்துள்ளார்கள் என்று தெரிவித்தார்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...

0 comments:
Post a Comment