Saturday, September 24, 2016

கோவையில் வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது.
இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் கோவையில் வெள்ளிக்கிழமை பரவலாக வன்முறை வெடித்தது
கோவை ரயில் நிலையம், கலைக்கல்லூரி சாலை, டவுன்ஹால், உக்கடம், கெம்பட்டி காலனி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம் சாலை, ரத்தின புரி, காந்திபுரம் உட்பட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதனால், பேருந்துகள் ஓடவில்லை.
நகரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் என கண்டறியப்பட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆற்றுப்பாலம் சுங்கச் சாவடி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களாவர். இன்னும் பலர் கைதாகலாம் என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
4 மாவட்டங்களில் கடையடைப்பு
சசிக்குமார் படுகொலையைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழ்மை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஓட வில்லை. மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.முழு விவரம்: |கோவையில் போலீஸ் வாகனத்துக்கு தீ; பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் மக்கள்|
6 தனிப்படைகள் அமைப்பு:
இதற்கிடையில், கொலையாளிகளை கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தெரிவித்துள்ளார்.
சசிக்குமார் கொலை குறித்து உளவுப் பிரிவு, "சசிக்குமாரை கொன்றது 4 பேர் கொண்ட கும்பல். மொபட்டில் சசிக்குமார் அன்றாடம் செல்வதை கண்காணித்தே கொலையை நடத்தியுள்ளனர். இருப்பினும், சசிக்குமாரின் செல்போன் அழைப்பு மற்றும் வாட்ஸ் அப் போன்ற விஷயங்களையும் சேகரித்து வேறு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சசிக்குமாரின் முதுகு, கழுத்து, கை என பல பகுதிகளில் 11 வெட்டு விழுந்துள்ளன" என்றனர்.
சகோதரர் சொன்ன தகவல்:
கொலையான சசிக்குமாரின் தம்பியும், கோவை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவருமான சுதாகர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘எங்கள் அண்ணன் சசிக்குமாருக்கு கேரளாவில் உள்ள ஒரு அமைப்பின் லெட்டர் பேடில் சில ஆண்டுகளுக்கு முன்பே மிரட்டல் கடிதம் வந்தது. அதையடுத்து அண்ணணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட் டது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை அவருக்கு ஒரு போலீஸ் துணையாகவே இருந்தார். அதை ஒரு வாரம் முன்பு தான் விலக்கினார்கள்" என்றார்
*கோவையில் இயல்பு நிலை திரும்பியது : பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிப்பு*
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையால் நேற்று பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோவையில் இயல்புநிலை திரும்புகிறது. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்க தொடங்கின. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Saturday, September 10, 2016
கோவை 10-9-16
தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பாரகிறேன்
ஐ.ஏ.எஸ் அதிகாரி கோவையில் பேட்டி
ஊழல் எதிர்ப்பு இயக்க கருத்தரங்கம் கோவை தமிழ்நாடு வோளண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பின் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் தமிழகத்தில் தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பாரகிறேன் எனவும்
அதற்க்கான ஆவணங்கள் அனைத்தும் உயர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது மேலும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் என்பது அரசுக்கு எதிரானது இல்லை எனவும் தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு அதிக வலு சேர்க்கும் என கூறினார். மேலும்
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே விவாசயிகள் வாழ்வு ஆதாரம் பாதுகாக்கபடு்ம். எனவே இதில் அரசாங்கம் அதிகபடியான கவனம் செலுத்த வேண்டும் திரு.சகாயம் வலியுறுத்தினார்.
Friday, September 09, 2016
உயிருக்கு போராடிய குட்டியானை மீட்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கோவனூரில் தண்ணீர் குடிக்க வந்த 4 வயது குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராட்டம். நீண்ட நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர் வனத்துறையினர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...