Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் டாக்டர் சரவணனின் இறப்பு சம்பவத்தில் டெல்லி போலீசாரின் ஒத்துழைப்பு இல்லை என்று அவருடைய தந்தை கணேசன் நேற்று நிருபர்களிடம் கூறினார்.டாக்டர் சரவணன்

திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த டாக்டர் சரவணன் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவர் கடந்த ஜூலை மாதம் 9–ந் தேதி தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர் சரவணன் இறந்தது தற்கொலையாக இருக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் திருப்பூரில் நேற்று டாக்டர் சரவணனின் தந்தை கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:–ஒத்துழைப்பு இல்லை

எனது மகனின் இறப்பு தற்கொலை அல்ல என்று அப்போதே கூறினேன். தற்கொலை செய்வதற்கான அவசியம் அவருக்கு இல்லை. இது திட்டமிட்ட கொலை. படிப்பதில் அவர் நம்பர் ஒன். அவருடைய குறிக்கோள் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தான். அங்கு இடம் கிடைத்த பின் அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.உப்பிலிய நாயக்கர் பேரவை உதவியுடன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எங்களுக்கு டெல்லி போலீசாரின் ஒத்துழைப்பு இல்லை. தற்கொலை என்று வழக்கை முடிப்பதிலேயே அங்குள்ள போலீசார் குறியாக உள்ளனர். திட்டமிட்டு கொலை என்று கூறுவதற்கு காரணம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. டெல்லி போலீசாரும் இதற்கு உடந்தை. நாங்கள் விசாரித்தவகையில், அங்கு இதுபோல் பல கொலைகள் நடந்ததாக தெரிவித்தனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார், திருப்பூரில் உள்ள டாக்டர் சரவணனின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–மரண தண்டனை

டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல. கொலை தான் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் கூட்டமைப்பை சேர்ந்த தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவையினர் ஒத்துழைப்புடன் இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டில் அணுகினோம். வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் குரல் கொடுக்கிறார்கள். இதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு இதை துரிதப்படுத்த வேண்டும்.டாக்டர் சரவணனின் குடும்பத்துக்கு தமிழக முதல்–அமைச்சர் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இந்த வழக்கை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கொலையாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். மத்திய அரசும், டெல்லி அரசும், போலீசாரும் சேர்ந்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். டாக்டர் சரவணனின் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

0 comments: