Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலையில் கடைகளை அடைக்க வலியுறுத்தியதாக இந்து முன்னணியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.கடைகளை அடைக்க வலியுறுத்தல்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் உடுமலையில் நேற்று காலை கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. இதற்கிடையில் இந்து முன்னணியினர் சிலர் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.இதன் பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மேற்பார்வையில் அங்கு போலீசார் விரைந்தனர். அத்துடன் அங்கு கடைகளை அடைக்க வலியுறுத்தியதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும் இந்து முன்னணியை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.21 பேர் கைது

மேலும், ஆங்காங்கே கடைகளை அடைக்க வலியுறுத்தியதாக இந்து முன்னணியை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடுமலை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வ.உ.சி. வீதி உள்ளிட்ட வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.சில வீதிகளில் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ஆனால் பெரும்பாலான பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. காலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள் பிற்பகலில் அடுத்தடுத்து திறக்கப்பட்டன

0 comments: