Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by farook press in ,    
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.
இந்நிலையில், சமீப காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதையடுத்து, கடந்த 15ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.18 குறைக்கப்பட்டது.
அதேபோல், தற்போதும், பெட்ரோல் விலை ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும், இந்த விலை குறைப்பு இன்று (30ஆம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.


0 comments: