Friday, May 29, 2020

On Friday, May 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். 

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையை அவமானப்படுத்தும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சில காட்சிகள் காட் மேன் படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. 




மேலும் 
அந்த படத்தில் பிராமணர்களை பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் அவதூறு கருத்துக்களும், கொச்சையான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது திட்டமிட்டு வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. 


அதனால் அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், தனியார் டிவி சேனல் (zee 5) நிர்வாக இயக்குனர் மற்றும் அதன் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 பேட்டி: தினேஷ்

0 comments: